»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்ட சம்பவம்குறித்து தமிழ்த் திரையுலகம் மெளனமாக இருப்பது வேதனையளிப்பதாக நடிகர் சங்கத் துணைத் தலைவர்எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.

மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டனா என்ற இடத்தில் படப்பிடிப்புக்காகச் சென்ற சமுத்திரம் படக்குழுவினர் மீதுகன்னட வெறியர்கள் கடுமையாக தாக்கினர். இதில் நடிகர்கள் சரத்குமார், கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில்மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் தாக்கப்பட்டனர்.

தமிழ்ப் படக்குழுவினர் இத்தனை பேர் தாக்கப்பட்டும் தமிழ்த் திரையுலகம் எந்தக் கவலையும் தெரிவிக்காதுமெளனமாக இருந்து வருகிறது. நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், துணைத் தலைவர் நெப்போலியன், இயக்குநர்சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர் சங்கம் (ஃபெப்சி) என அத்தனை பேரும் அமைதியாக இருந்துவருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் சங்க துணைத் தலைவர் எஸ்.எஸ்.சந்திரன் தாக்குதல் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியைவெளிப்படுத்தியுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் கன்னடவெறியர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

நான் அ.தி.மு.க. நடிகர்தான். இருந்தாலும் இந்தத் தாக்குதலில் காயமடைந்திருப்பது சினிமாக்காரன் என்ற உணர்வுஎனக்கு உள்ளது. நடிகர் சரத்குமார் போன்ற முன்னணிக் கலைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து தமிழ்த் திரையுலகம்வாய் மூடி, மெளனியாக நிற்பது ஏன் என்று தெரியவில்லை.

தமிழ், தமிழன் என்று அடிக்கடி வசனம் பேசும் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருக்கிறார்?. தமிழர் என்ற உணர்வு அவருக்கு மங்கிப் போய் விட்டதா, தனது தளபதி என்று அவர்வர்ணிக்கும் சரத்குமார் தாக்கப்பட்டும் கூட அமைதியாக இருக்கிறாரே?

சரத்குமார் ஆதரவுடன் சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த நெப்போலியன் கூட அமைதியாக இருப்பதுகொடுமையானது.

இந்த நிலை நீடித்தால் போகிற இடமெல்லாம் தமிழ் சினிமாக்காரர்கள் அடி வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்என்றார் சந்திரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil