»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தனியார் டி.வி. சேனல்களில் புதுப் படங்கள் ஒளிபரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்தப்படங்களை ஒளிபரப்புவதற்காகவே "தமிழ்த் திரை" என்ற புதிய சேனல் உருவாகிறது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் சேர்ந்து தொடங்கவுள்ள இந்தசேனலில் புதுப் படங்கள் போடப்படும். ஆனால் இந்த சேனலை காசு கொடுத்துதான் பார்க்க முடியும்.

தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான நெருக்கடிகள் குறித்தும், கேபிள் டி.வி.உரிமையாளர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்க 200 கேபிள் டி.வி.உரிமையாளர்களுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் பேச்சு நடத்தினர்.

இது தொடர்பான கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், இயக்குநர்கள் பாரதிராஜா,பாலு மகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் முரளிதரன் நிருபர்களிடம் பேசுகையில், திருட்டு விசிடிக்களின்நடமாட்டம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. இதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.

அதன் ஒரு கட்டமாகத்தான் கேபிள் டி.வி. உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அதன்இறுதியில் நாமே ஒரு டி.வி. சேனலை தொடங்கலாம் என்று முடிவுக்கு வந்துள்ளோம்.

இது "பே" சேனலாக இருக்கும். புதுப் படங்கள் அனைத்தும் இதில் ஒளிபரப்பப்படும்.

இந்தத் தொலைக்காட்சியை கண்காணிக்க, நிர்வகிக்க 25 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இதில்10 பேர் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். மேலும் இயக்குநர் சங்கத்தைச் சேர்ந்த10 பேரும், கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 5 பேரும் இந்தக் குழுவில்இருப்பார்கள்.

"தமிழ்த் திரை" என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் புதிய படம் எப்போது திரையிடப்படும்என்பதை இந்தக் குழு முடிவு செய்யும். தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம்குறித்தும் இந்தக் குழுவே முடிவு செய்யும்.

இந்த முடிவுகள் மூலம் இனிமேல் அனுமதி இல்லாமல் கேபிள் டி.விக்களில் புதிய படங்கள்திரையிடப்படாது என்றார் முரளிதரன்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். கேபிள் டி.வி. மூலம் புதிய படங்களைத் திரையிட்டால் இனிமேல் புதியபடங்களை வாங்க மாட்டோம் என்று ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

ஆனால் தியேட்டர் உரிமையாளர் சங்கம் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்குக் கவலையில்லை.இதை விட்டால் நஷ்டத்திலிருந்து தப்பிக்க எங்களுக்கு வேறு வழியில்லை என்று தயாரிப்பாளர்கள்தரப்பில் கூறப்படுகிறது.

திருட்டு வி.சி.டி. தொல்லையிலிருந்தும், அதனால் ஏற்படும் நஷ்டத்திலிருந்தும் தப்பிக்க இது ஒன்றேவழி என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil