»   »  இது தான் ‘தலைப்பு செய்தி’!

இது தான் ‘தலைப்பு செய்தி’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெகபதிபாபு -சார்மி நடிக்கும் படத்திற்கு தலைப்பு செய்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரகாஷ்ராஜ், பூமிகா நடித்த பெண் அடிமை இல்லை படத்தை தயாரித்த ரமணா பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு " தலைப்பு செய்தி " என்று பெயரிட்டுள்ளனர்.

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமே தமிழில் தலைப்பு செய்தியாக மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

சார்மி நாயகி...

சார்மி நாயகி...

இந்தப் படத்தில் லிங்காவில் வில்லனாக நடித்த ஜெகபதிபாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சார்மி நடிக்கிறார். இவர்கள் தவிர சத்யபிரகாஷ், காந்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரேம்ராஜ் இயக்கம்...

பிரேம்ராஜ் இயக்கம்...

இந்தப் படத்திற்கு இசை -யாஷோ கிருஷ்ணா, பாடல்கள்- ஜி, ஒளிப்பதிவு- லஷ்மி நரசிம்மன், நடனம் -சிவசங்கர், ஸ்டன்ட்- ராக்பிரபு, எடிட்டிங்- ஹரி, கலை -ராஜீவ்நாயர், எழுதி, இயக்கி இருப்பவர்-பிரேம்ராஜ், தயாரிப்பு வி.ரமணா, கான்பர்தீன் கான்.

இது தான் கதை...

இது தான் கதை...

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது இப்படம். இது தொடர்பாக இயக்குனர் பிரேம்ராஜ் கூறுகையில், ''நம்பர் ஒன் சேனலாக மாற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒரு டிவி நிர்வாகம் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது.

தலைப்பு செய்தி...

தலைப்பு செய்தி...

அந்த டிவியில் செய்தியாளராக வேலை செய்யும் சார்மியிடம் ஒரு பென்டிரைவ் கிடைக்கிறது. அதில் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாகும். அதை கைப்பற்ற நினைக்கும் சமூக விரோத கும்பலுக்கும், ஜெகபதிபாபு, சார்மிக்கும் இடையே நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் தலைப்பு செய்தி' என்கிறார்.

விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழில் காதல் அழிவதில்லை படம் மூலம் நாயகியாக அறிமுகமான சார்மிக்கு தொடர்ந்து சொல்லிக் கொள்வது போல் படங்கள் அமையவில்லை.

மீண்டும் தமிழில்...

மீண்டும் தமிழில்...

ஆனால், தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக சார்மி உள்ளார். இந்நிலையில், தலைப்புச் செய்தி மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் சார்மி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Jagapathi Babu, Charmi's super tooper hit Telugu movie is releasing in Tamil as Thalaippu seithi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil