»   »  போதைப் பொருள் வழக்கு: சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக நடிகை சார்மி ஹைகோர்ட்டில் மனு

போதைப் பொருள் வழக்கு: சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக நடிகை சார்மி ஹைகோர்ட்டில் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போதைப் பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழுவுக்கு எதிராக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை சார்மி.

போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கூறி நடிகை சார்மிக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

Charmme goes to court against SIT in drug case

இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக சார்மி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த குழுவினர் சார்மியிடம் வாக்குமூலம் கேட்டதுடன் ரத்த மாதிரி, தலைமுடி, நக மாதிரி கேட்டார்களாம்.

இதனால் சந்தேகம் அடைந்து அவர் நீதிமன்றம் சென்றுள்ளாராம். மேலும் தன்னை பெண் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும் என்று சார்மி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சார்மிக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்று அவர் தந்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Charmme Kaur has approached high court in Hyderabad againt the special investigation team in the drug racket case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil