»   »  அம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா? - சாருஹாஸன் சப்போர்ட்

அம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா? - சாருஹாஸன் சப்போர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா? - சாருஹாஸன் சப்போர்ட்- வீடியோ

சென்னை: கமல் ஹாஸனை தொடர்ந்து சாடி வரும் அதிமுக அமைச்சர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவரது அண்ணன் சாருஹாஸன்.

இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:

Charu Hasan supports Kamal

மாண்பு மிகு அமைச்சர் ஜெயகுமார் தொலைக்காட்சியில் பேசியபோது, நடிகர் கமல் மீது என்ன குற்றம் சாட்டுகிறார் என்பதை விவரிக்கட்டும். இந்த அமைச்சர் லஞ்சம் வாங்கும் பழக்கம் தெரியாதவர் என்று கேள்விப்படுகிறேன். ஆனால் இந்த அமைச்சர் அம்மா வழியில் அம்மா ஆட்சி நடத்துகிறேன் என்று சொல்பவர். நானும் அறுபது கோடிக்கும் குறையாமல் கொள்ளையடிப்போம் என்று சொல்கிறீர்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.

அமைச்சரே.....? கமல் அம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லவில்லை என்பது உங்கள் சிந்தனையில் தவறாக தோன்றலாம். அம்மா சொல்படி நடக்காமல் காலில் விழ ஒப்புக்கொள்ளாமல் மாநிலத்தை விட்டு வெளியேருகிறேன் என்று சொன்ன குற்றம்தான் கமல்மீது கூறலாம். இந்த அமைச்சருக்கு நெஞ்சில் வீரமிருந்தால் உச்ச நீதிமன்றம் மாண்புமிகு அம்மா அவர்கள் தகுதிக்கு அதிகமாக அரசு ஊழியராக 60 கோடிகள் சொத்து சேர்த்தார், அதை சசிகாலவுக்கு இனாமாக கொடுத்தார் (அல்லது தாற்காலிகமாக கொடுத்து வைத்தார் என்று வைத்துக்கொள்வோம்} என்று இருவரும் குற்றவாளி என்று தீர்ப்பு செய்து ஜெயா அவர்கள் இறந்துவிட்டதால்... பிணங்களுக்கு என்று தணடனை கிடையாது என்று விடப்பட்டது.

...இறந்தவர்களின் தவறுகளை மறக்கலாமே ஒழிய மன்னிக்க முடியாது. என் கருத்தில் அதிமுக முக்கிய தலவர்கள் 'அம்மா வழி' என்று 60 கோடிவரை கொள்ளையடிப்போம் என்று அமைச்சர் சொல்வதாக தெரிகிறது. அமைச்சரே நீர் அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று சொல்வது அரசியல் கொள்ளையை நியாயப்படுத்தும் முறையாகத் தெரிகிறது. மக்கள் பணத்தில் நாங்கள் கைவைத்து சொத்துசேர்க்க மாட்ட்டோம் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள்.

கமலஹாசனை விட்டு விடுங்கள்.... ரசிகர்கள் கலகம் செய்யக்கூடும்.... சாருஹாசன் சொல்கிறேன்.. அம்மா வழியில்தான் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லும்வரை நீங்கள் வருங்கால குற்றவாளிகள் என்று தெரிகிறது... எனக்கு ரசிகர்கள் கிடையாது ஒரு கலகமும் வராது! நான் உங்கள் அரசை நீதி மன்றத்தில் மட்டும்தான் சந்திப்பேன். நீஙகள் இதுவரை லஞசம் வாங்கியதில்லை என்று சொல்லுங்கள் ஒப்புக்கொள்கிறேன். என் வீட்டு வாசல் கதவும் நிலையும் லஞ்சம் வாங்கியதில்லை..! அவைகள் உங்கள் அமைச்சரவையில் இடம் பெறலாமோ? உங்கள் அதிகார பேச்சு லஞ்சத்துக்கு துணைபோகும் அரசு ஊழியராக தெரிகிறது. உங்கள் ஆட்சி தொடுக்கும் வழக்குக்களை சந்திக்க தயார்.

-சாருஹாஸன்

English summary
Actor Charu Hasan has slammed the ADMK govt for their continuous attack on Kamal Haasan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil