»   »  டான்.. டான்... டான்... ரஜினி வழியில் ‘கபாலி’ ஆகும் கமல் அண்ணன்!

டான்.. டான்... டான்... ரஜினி வழியில் ‘கபாலி’ ஆகும் கமல் அண்ணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருது பெற்ற நடிகரும், நடிகர் கமலின் சகோதருமான சாருஹாசன் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் புதிய படமொன்றில் டான் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் தந்தையும், நடிகர் கமலின் சகோதருமான சாருஹாசன் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் ஆவார். தேர்ந்தெடுத்த வேடங்களில் மட்டுமே நடித்துள்ள சாருஹாசன், தாபரண கதா என்ற கன்னட படத்திற்காக தேசிய மற்றும் மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இது தவிர குபி மாட்டு இயலா -என்ற கன்னட படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசின் விருதும் பெற்றிருக்கிறார். தற்போது 85 வயதாகும் சாருஹாசன், சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

இந்நிலையில், புதிய படமொன்றில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அறிமுக இயக்குநர் விஜய்ஸ்ரீ இயக்கும் இப்படத்தில் சாருஹாசனுக்கு டான் வேடமாம். சமீபத்தில் சாருஹாசனை சந்தித்து விஜய் கதை சொல்லியுள்ளாராம்.

முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க சாருஹாசன் தயங்கியதாகவும், ஆனால் அந்த கேரக்டரை உங்களை மனதில் வைத்து தான் எழுதினேன் என விஜய் அவரை சம்மதிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Charuhasan to play a local don!

இந்த படத்தின் டேக்லைன் 'நோ பவுடர் நோ மேக்கப்' என்பது தானாம். அதாவது இந்த படத்தில் நடிக்கும் சாருஹாசன் உள்பட எந்த நடிகருக்கும் மேக்கப் என்ற சமாச்சாரமே இல்லையாம்.

ராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரகாஷ் நிக்கி இசையமைக்கின்றார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் வயதான டான் வேடத்தில் நடித்த 'கபாலி' படம் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூலைத் தந்து வருகிறது. இந்நிலையில் இதே போன்ற கேரக்டரில் சாருஹாசனும் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"டண்டணக்கா டான்" ஆக கதை இல்லாமல் இருந்தால் சரிதான்.

English summary
Actor Charuhasan will be seen in a negative role as a don in an upcoming film that is directed by newcomer Vijay Sri G.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil