»   »  மக்கள் மீது மோதிய சாயா சிங்கின் கார்

மக்கள் மீது மோதிய சாயா சிங்கின் கார்

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம் அருகே சாலையில் சென்ற சிலர் மீது மோதி, படுகாயப்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நடிகைசாயாசிங்கின் காரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.

இதனால் சென்னை-திருச்சி நெடுஞ்சாயிைல் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

திருடா திருடி படத்தின் மன்மத ராசா பாடல் மூலம் முன்னணிக்கு வந்தவர் சாயாசிங்.

புதுவையில் ஒருபடப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவரது கார் திண்டிவனம் அருகே கிளியனூர்என்ற இடத்தில் வந்தபோது, சாலையில் சென்ற சிலர் மீது மோதியது.

இதில் சிலர் காயமடைந்தனர். 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்திற்குப் பிறகும் சாயாசிங்கின் கார் டிரைவர்காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

இதுகுறித்து திண்டிவனம் போலீஸாருக்குத் தகவல் போனது.

இதையடுத்து போலீஸார் ஜீப்பில் சாயா சிங் சென்ற காரை துரத்திச் சென்றனர்.

ஓரத்தூர் என்ற இடத்தில் காரைமடக்கி நிறுத்தினர்.

அப்போது தான் காரில் இருப்பது சாயா என்று தெரியவந்தது. இதையடுத்து காரை திண்டிவனம் காவல்நிலையத்திற்கு ஓட்டிச் சென்ற போலீசார் சாயாசிங்கை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவரை தொடர்ந்து காவல் நிலையத்திலே. வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரும் காவல்நிலையத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil