»   »  ஓவர் பில்டப்புக்குள்ளாகி உடம்புக்கு முடியாமல் படுத்து பனால் ஆன படங்கள்.. ஒரு ரவுண்டப்!

ஓவர் பில்டப்புக்குள்ளாகி உடம்புக்கு முடியாமல் படுத்து பனால் ஆன படங்கள்.. ஒரு ரவுண்டப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுங்க என்பது போல், கடந்தாண்டு பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டு, ரிலீசுக்குப் பின் பலத்த ஏமாற்றத்தைத் தந்த படங்கள் ஏராளம்.

2015- ஆண்டு மட்டும் 204 படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. இதில் சில படங்கள் வெற்றி அடைந்ததுடன் மட்டுமில்லாமல் வரலாறு காணாத வசூலையும் குவித்தது. அதேபோல், பல படங்கள் தோல்வியையும் தழுவியது.


சிறிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை தழுவியதும், மிகப்பெரிய படங்கள் ஏமாற்றங்களை தந்ததும் என பட்ஜெட் இந்த வெற்றி, தோல்வியை தீர்மானிக்கவில்லை.


அந்தவகையில், தமிழில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி, பல்பு வாங்கியது.


இதோ அவற்றில் சில...


சந்தானம் :

சந்தானம் :

காமெடியில் கலக்கிய சந்தானம் நாயகனாக நடித்து "இனிமே இப்படித்தான்" என்ற தலைப்பில் படம் ரிலீசானது. இது படத்தலைப்பு மட்டும் தானா, இல்லை இனி அவர் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பாரா என பரபரப்பை உண்டாக்கியது இப்படம். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை இப்படம் தரவில்லை. ரசிகர்களை காமெடியானாக திருப்பி படுத்திய சந்தானத்தால், நாயகனாக ஏமாற்றத்தையே கொடுக்க முடிந்தது என சொல்லாமல் சொல்லியது இப்படம்.


வடிவேலு :

வடிவேலு :

வடிவேலு நடிப்பில் இந்தாண்டு வெளியான படம் எலி. சில வருடங்கள் படங்களில் இருந்து விலகி இருந்த போதும், அவரது இடம் தொடர்ந்து காலியாகவே இருந்தது. அந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் வடிவேலு. எனவே, அவரது எலி படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், எதிர்பார்த்தபடி எலியால் சிக்கலை உடைத்தெறிந்து வெளிவர முடியவில்லை. எலி வடிவேலுக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியது தான் மிச்சம்.


சிம்பு:

சிம்பு:

வம்புகளுக்கு பேர் போன சிம்புவின் படங்கள் ரிலீசாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்ற பெயரை உடைத்து, ஒரு வழியாக கடந்தாண்டு ரிலீசானது வாலு. சிம்பு- ஹன்சிகா காதல், தோல்வி எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இன்னும் சில சிம்புவின் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அவையாவது அவரது ரசிகர்களைத் திருப்தி படுத்துமா எனப் பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விஷால் :

விஷால் :

ஆம்பள, பாயும் புலி என கடந்தாண்டு ரிலீசான விஷாலின் இரண்டு படங்களுமே இருவேறு கதையம்சங்களை கொண்டது. ஆனால், இவ்விரண்டிலும் விஷாலின் ரசிகர்கள் அடைந்தது ஏமாற்றம் மட்டுமே. இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் என்பதே அவர்களது கருத்து. இந்தாண்டு மருது, மதகதராஜா, சண்டகோழி 2 என விஷாலுக்கு கை நிறைய படங்கள். நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி மாலை சூடியது போலவே, இந்தப் படங்களிலும் வெற்றி பெறுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


சூர்யா :

சூர்யா :

எந்த வேடமாக இருந்தாலும் அதில் அர்ப்பணிப்போடு நடித்துக் கொடுப்பவர் சூர்யா. அந்தவகையில் பேய் படங்கள் என்ற தற்போதைய டிரண்டிற்கு ஏற்ப, மாசு என்கிற மாசிலாமணி என்ற படத்தில் நடித்தார் சூர்யா. ஆனால், பேரு தான் மாசு மற்றதெல்லாம் தூசு என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதனை வறுத்தெடுத்து விட்டனர். ஆனால், பசங்க 2 படம் தந்த வெற்றி, மாசுவைப் போக்கி விட்டது.
ஜெயம் ரவி :

ஜெயம் ரவி :

கடந்தாண்டு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் ஜெயம் ரவி. அவரது தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் மற்றும் பூலோகம் ஆகிய படங்கள் வெற்றியை வாரிக் குவித்தது. ஆனால், நடுவில் கொஞ்சம் சொதப்புவோம் என வெற்றி நாயகனுக்கு திருஷ்டியாக வெளிவந்த படம் சகலகலா வல்லவன் அப்பாடக்கர் படம். ஆக்‌ஷனும், காதலும் கை கொடுத்த அளவிற்கு இந்தப் படத்தில் ரவிக்கு காமெடி கை கொடுக்கவில்லை.


விக்ரம் :

விக்ரம் :

கொஞ்சம் நடிங்க பாஸ் என்று சொன்னாலே அதன் கதாப்பாத்திரமாகவே வாழ ஆரம்பித்துவிடும் நடிகர் விக்ரம். இவர் 3 வருட கடின உழைப்பு, நல்ல கதை, ஷங்கரின் இயக்கம் என பலத்த பில்டப்புகளோடு வெளியாகி ஏமாற்றத்தைத் தந்தது ஐ. ஒரு படம்தான் இப்படி என்றல் "10 என்றதுக்குள்ள" திரைப்படமும் இவரின் ரசிகர்களுக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை.


விஜய் :

விஜய் :

மாஸ் ஹீரோக்களுக்கு மிகப்பெரிய மாஸ் ரசிகர் கூட்டமே இருக்கும். அந்த மாஸ் ஹீரோக்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். இவரின் புலி திரைப்படம் தெலுங்கு திரைப்படமான பாகுபலிக்கு போட்டியாக வரும் என்று ரசிர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வந்ததோ சிறு குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் தான். இதை விட ரசிகர்களுக்கு என்ன ஏமாற்றம் வந்துவிட போகின்றது. .


கமல் ஹாசன் :

கமல் ஹாசன் :

இந்த வருடம் உலக நாயகனின் பாபநாசம் படத்தினை தவிர வந்த உத்தம வில்லன் மற்றும் தூங்காவனம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பல வருடங்கள் கழித்து இவர் மறுபடியும் தொடர்ந்துள்ள மருதநாயகம் திரைப்படமாவது 2016-ல் வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


நம்பிக்கைத்தான் வாழ்க்கை பாஸ்...!
English summary
There are certain films which are failed to impress the audience. Let us watch some films which are failed at the screens in 2015.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil