பல உண்மைகளை சொல்லுவேன்..சிறையிலிருந்து வெளியே வந்த அர்னவ்.. அதிரடி பேட்டி!
சென்னை : சிறையிலிருந்து வெளியே வந்துள்ள நடிகர் அர்னவ், விரைவில் செய்தியாளர்களை சந்தித்து பல உண்மைகளை சொல்லுவேன் என கூறியுள்ளார்.
சீரியல் நடிகரான அர்னவ் கேளடி கண்மணி, மகராசி, கல்யாணப் பரிசு ஆகிய சீரியல்களில் தன்னுடன் நடித்த நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து நடிகை திவ்யா, தான் கர்ப்பமான பிறகு தன்னை விட்டு பிரிந்து வேறு ஒரு சீரியல் நடிகையை காதலித்து வருவதாகவும், இதனால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அர்னவ் மீது புகார் அளித்தார்.

நடிகை திவ்யா
கேளடி கண்மணி கண்மணி சீரியலில் நானும் அர்னவ்வும் இணைந்து அடித்த போது காதலிக்கத் தொடங்கினோம். இருவரும் ஒரே வீட்டில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் லிவ்விங் டு கெதர் ரிலேஷன் ஷிப்பில் இருந்தோம். எங்களுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது, எங்களது திருமண போட்டோவை நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதில் இருந்தே எங்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்தது.

நடிகையுடன் தொடர்பு
அதுமட்டும் இல்லாமல்,செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையுடன் அர்னவ் தொடர்புவைத்துள்ளார். அவருடன் எப்போதும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார். இதை கேள்வி கேட்டதால், கர்ப்பிணி என்றும் பார்க்காமல் என்னை அடித்துவிட்டதாக நடிகை திவ்யா புகார் கொடுத்திருந்தார்.

புழல் சிறையில் அர்னவ்
நடிகை திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் மீது கொலை மிரட்டல் வன்புணர்வு உள்ளிட் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அர்னவை விசாரனைக்கு ஆஜராகுமாறு பலமுறை அழைக்கப்பட்டார். ஆனால், அவர் ஆஜராகததால், போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து படப்பிடிப்பில் இருந்த அர்னவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மன உளைச்சலில் இருக்கிறேன்
இதையடுத்து, பூவிருந்தமல்லி குற்றவியல் நீதிமன்றம் நடிகர் அர்னவ்வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து, இன்று வெளியே வந்த அர்னவ், செய்தியாளர்களிடம் நான் இப்போது மன உளைச்சலில் இருக்கிறேன், செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்து இருக்கிறேன். நீதி கண்டிப்பா ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இன்னும் சில நாட்களில் நான் பேட்டி கொடுப்பேன் அப்போது பல உண்மைகளை நான் சொல்லுவேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











