»   »  நாளை வெளியாகிறது சென்னை 28 - II.. முதல் பாக மேஜிக் நிகழுமா?

நாளை வெளியாகிறது சென்னை 28 - II.. முதல் பாக மேஜிக் நிகழுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் காமெடி, காதல், கிறுக்குத்தனம் எல்லாம் கலந்து புதிய பாணிப் படமாக உருவாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் சென்னை 28.

இந்தப் படத்துக்குப் பிறகு நிறையப் பேர் இதே பாணியில் படம் எடுத்துப் பார்த்தார்கள். ஸ்பூப் படங்கள் எடுத்தார்கள். ஆனால் வெங்கட் பிரபுவுக்குக் கிடைத்த வெற்றி எல்லோருக்கும் கிடைத்துவிடவில்லை.

Chennai 28 from Tomorrow

இந்த நிலையில்தான் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு. முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இந்த இரண்டாம் பாகத்திலும் உள்ளனர்.

படத்தின் ட்ரைலர், பாடல்கள் அனைத்துமே இந்தத் தலைமுறை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai 28 from Tomorrow

இந்தப் படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. முதலில் பணத்தட்டுப்பாடு காரணமாக தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது திட்டமிட்டபடி டிசம்பர் 9-ம் தேதியே படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Venkat Prabhu's sequel of Chennai 28 will be released on Dec 9th as per schedule.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil