»   »  சென்னை 28: உருவாகிறது பார்ட் 2, பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

சென்னை 28: உருவாகிறது பார்ட் 2, பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடும் தேதியை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டு இருக்கிறார்.

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா, கோவா போன்ற படங்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து வெற்றி கண்டார்.

அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா இவரை பெரிய பட்ஜெட் இயக்குனராக மாற்றியது. ஆனால் மங்காத்தா ஹிட்டை அடுத்து வந்த பிரியாணி, மாஸ் 2 படங்களும் வெங்கட் பிரபுவை மொத்தமாக காலி செய்துவிட்டது.

இந்நிலையில் சென்னை 28 படத்தின் 2 வது பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு முன்வந்திருக்கிறார். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு தனது அடுத்த படம் இதுதான் கண்டுபிடியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அந்தப் போஸ்டரில் 3 ஸ்டம்ப்புகள் நிற்பது போன்று இருக்க, ரசிகர்கள் கண்டிப்பாக இது சென்னை 28 படத்தின் 2 வது பாகம் தான் என்று கூறியிருக்கின்றனர்.

வருகிற பிப்ரவரி 28-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, விஜய் வசந்த், நிதின் சத்யா, வைபவ், விஜயலட்சுமி உள்ளிட்டோர் இப்படத்திலும் நடிப்பார்கள் என தெரிகிறது.

வழக்கம் போல யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படம் வெங்கட் பிரபுவின் 7 வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai 28: Director Venkat Prabhu Announced First Look Release date.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil