»   »  திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட்

திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட்

Subscribe to Oneindia Tamil

அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடா சென்று திரும்பிய நடிகரும், தேமுதகி தலைவருமான விஜயகாந்த்தை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் குவிந்து விட்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது.

விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். இப்படத்தை மாதேஷ் இயக்குகிறார். மும்பை நடிகை நவ்னீத் கெளர் ஜோடியாக நடிக்கிறார். அவரது மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 20 நாட்களாக கனடாவில் நடந்தது.

படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னைக்குத் திரும்பினர். கனடாவில் விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலில், திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி கிளம்பியது. இதனால் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் நீண்ட நேரம் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்து அவதிப்பட்டனர்.

இப்படித் தடைகளைக் கடந்து படப்பிடிப்பை முடித்து விட்டு கேப்டன் ஊர் திரும்பியதால் அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு தேமுதிகவினரும், அவரது ரசிகர்களும் பெருமளவில் திரண்டு விட்டனர்.

ஆயிரக்கணக்கில் விமான நிலையத்திற்கு வந்திருந்த தொண்டர்களில் 500க்கும் மேற்பட்டோர், டிக்கெட் எடுத்து விமான நிலைய வரவேற்புப் பகுதிக்குள் போய் விட்டனர். இதனால் அந்த இடமே பெரும் கூட்ட நெருக்கடியால் சிக்கித் திணறியது.

மற்ற பயணிகளும், அவர்களை வரவேற்க வந்தவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

விஜயகாந்த்தை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் கேப்டன் வாழ்க, கேப்டன் வாழ்க என்ற கோஷத்தைக் கேட்ட வெளிநாட்டுப் பயணிகள் சிலர் யார் அந்த கேப்டன் என்று ஆச்சரியப் பார்வை பார்த்தபடி சென்றனர்.

Read more about: captain
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil