»   »  வெள்ளியன்று வெளியாகும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு கோர்ட் தடை!

வெள்ளியன்று வெளியாகும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு கோர்ட் தடை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதியின் வெள்ளியன்று வெளியாகும் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய் சேதுபதி- காயத்ரி நடித்துள்ள புரியாத புதிர் திரைப்படம் தயாராகியும் ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா வெற்றி படமாக ஓடியது.

Chennai Court issues stay of Vijay Sethupathi's film Puriyatha Puthir

இதையடுத்து புரியாத புதிர் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 1) வெளியாகும் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் 20 திரையரங்குகளை புரியாத புதிர் பிடித்திருந்தது.

தற்போது புரியாத புதிர் படத்துக்கு திடீரென சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதால் தடை கோரி ஃபெப்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புரியாத புதிர் படத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

English summary
The Chennai city court today issued a stay order of Vijaya Sethupathi's film Puriyatha Puthir which will be release on Friday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil