»   »  எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்கதானே அட்ரசு - சென்னை தினம் கொண்டாடிய ஸ்டார்கள்!

எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்கதானே அட்ரசு - சென்னை தினம் கொண்டாடிய ஸ்டார்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் இதயம் மற்றும் இளைஞர்களின் கனவு தேசம் என்று பல்வேறு பெருமை புகழ்களைக் கொண்ட சென்னை(மெட்ராஸ்) நேற்று தனது 376 வது பிறந்த நாளைக் கொண்டாடியது.

இதனைக் கொண்டாடும் பொருட்டு #HBDChennai என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டடிக்க வைத்தனர் தமிழர்கள், சென்னை மைந்தர்கள் மட்டுமின்றி ஆங்காங்கே உலகம் முழுவதும் உள்ளவர்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சென்னையைப் பற்றிய தங்கள் அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.

சிறுவயது முதலே சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நட்சத்திரங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டு, தங்களை வாழ வைக்கும் சென்னையைப் பற்றி ஒருசில மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

அவற்றில் ஒரு சில நட்சத்திரங்களின் பிளாஷ்பேக்குகளை பார்க்கலாம்.

ஆர்யா

சென்னையைப் பற்றி சொல்ல வேண்டுமானால் தியேட்டர், பீச், ஆட்டோ நண்பர்கள் இந்த மூன்றுடன் சேர்ந்து சிறுவயது அண்ணா நகரில் வாசித்த நினைவுகள் ஆகியவற்றை என்னால் மறக்க முடியாது. சென்னையில் பிடித்த உணவு சூடான இட்லி மற்றும் தேங்காய் சட்னி என்று கூறியிருக்கிறார். மேலும் சென்னை தினம் என்றவுடன் எனக்கு உடனே ஞாபகம் வருவது மதராசப்பட்டினம் படமே என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் நடிகர் ஆர்யா.

விஷால்

விஷால்

நான் சிறுவயதாக இருந்தபோது அலங்கார் தியேட்டரில் படம் பார்த்தது, பெற்றோருடன் சேர்ந்து ஹோட்டல், பீச் போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்றது என்னால் மறக்க முடியாது. அன்று என் கையில் 10 ரூபாய் இருந்தால் வானத்தில் பறப்பது போன்று உற்சாகம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஷால்.

கார்த்தி

கார்த்தி

சென்னையில் என்னோடு கலந்து விட்ட தியாகராய நகரை என்னால் மறக்க முடியாது, சிறுவயதில் அங்கு எனது வீடு இருந்ததால் பாட்டியுடன் சேர்ந்து ஏரியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். மெரீனா பீச்சுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்கு உள்ள புகாரி ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட பின்பே வீடு திரும்புவேன் என்று சென்னையை நினைவு கூர்ந்திருக்கிறார் மெட்ராஸ் நாயகன் கார்த்தி.

அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் நம்ம சென்னை என்று மெட்ராஸிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார், சான்சே இல்லை ப்ரோ என்று சென்னையின் பெருமைகளை பாடலில் கொண்டுவந்தவர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்னை

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்னை நான் எப்போதும் உன் மீது அன்பு செலுத்துவேன்" என்று கூறியிருக்கிறார் நடிகை சுருதிஹாசன்.

இதே போன்று சென்னையில் பிறந்த மற்றும் பிறக்காத லட்சக்கணக்கான நபர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது #HBDChennai.

English summary
Yesterday Chennai Celebrating 376th Birthday - Celebrities Twitter Comments.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil