twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துறை உயர் அதிகாரி: மகிழ்ச்சி #Viswasam

    By Siva
    |

    சென்னை: விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார்.

    சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. தியேட்டர்களில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் படத்தை பார்த்த சென்னை காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    அஜித்

    அஜித்

    A leader is someone who demonstrates what's possible. சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டை காட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

    ஹெல்மெட்

    ஹெல்மெட்

    படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஓட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

    விதிமுறைகள்

    இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    சத்யஜோதி

    விஸ்வாசம் படத்தை பாராட்டியுள்ள அர்ஜுன் சரவணனுக்கு தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நன்றி தெரிவித்துள்ளது.

    English summary
    Arjun Saravanan, Deputy Commissioner of Police, Chennai has watched Viswasam and appreciated it on Facebook.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X