»   »  சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ல் தொடக்கம்

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ல் தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளன.

சென்னையில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் டிசம்பர் 10ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறவிருந்த 13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது மழை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி 13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வை நடத்த விழா அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். 6ம் தேதி தொடங்கும் விழா தொடர்ந்து 13ம் தேதி வரை நடக்கிறது.

இந்த சர்வதேச திரைப்பட விழாவை சென்னையில் உள்ள இந்தோ சினி அப்ரிசேஷன் என்ற அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து நடத்துகிறது. தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள், படங்களின் பட்டியல் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விழா அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த திரைப்பட விழாவில் 70 நாடுகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

English summary
The organizers of the 13th Chennai International Film Festival today announced that the event has been rescheduled to January 6 and will conclude on January 13.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil