twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா காரணமாக.. பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழா!

    By
    |

    சென்னை: கொரோனா காரணமாக சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதம் சென்னை, சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம்.

    தமிழக அரசின் ஆதரவோடு இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் இந்தப் பட விழாவை நடத்தி வருகிறது.

    இப்போது கொரோனா பரவல் காரணமாக, இயல்பு வாழ்க்கை இன்னும் முழுவதுமாக திரும்பவில்லை. இந்த தொற்றுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    chennai international film festival will be held on February

    கொரோனா தொற்றுக்கான மருந்துகள் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. தினமும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. இதனால் அதிகமானவர்கள் குணமடைந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கொரோனா காரணமாக, டிசம்பர் 2020-க்கு பதிலாக 2021 பிப்ரவரி மாதம் நடத்த முடிவு செய்துள்ளனர். பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இதை சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்புக் குழுவான இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் பொதுசெயலாளர் செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் வழக்கம்போல், உலக சினிமா, தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி, இந்தியன் பனோரமா, ரெட்ரோஸ்பெக்டிவ் , கன்ட்ரி ஃபோகஸ் என அனைத்து அம்சங்களும் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.

    English summary
    18th chennai international film festival will be held on February 2021
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X