»   »  ஜுராசிக் வேர்ல்டை பின்னுக்குத் தள்ளும் தமிழ்ப் படங்கள்

ஜுராசிக் வேர்ல்டை பின்னுக்குத் தள்ளும் தமிழ்ப் படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மே மாத இறுதியில் வெளிவந்த ஜுராசிக் வேர்ல்ட் ஹாலிவுட் திரைப்படம், சென்னையில் வசூலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. படம் வெளிவந்து ஒரு மாதம் முடியப் போகின்றது ஆனால் இன்னும் தியேட்டர்களில் கூட்டம் இன்னும் குறையவில்லையாம்.

சென்னையில் மட்டுமே இதுவரை 3 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் சென்று மக்கள் அலைமோதுவது தான் இதற்குக் காரணம்.

சென்னையில் தமிழ் அல்லாத ஒரு ஹாலிவுட் திரைப்படம் இந்த அளவுக்கு வசூல் செய்வது இதுவே முதல் முறையாம், அதுவும் தமிழ்ப் படங்களின் வசூலையும் சேர்த்து அள்ளிவருகின்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான இன்று நேற்று நாளை, யாகாவாராயினும் நாகாக்க மற்றும் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற படங்கள் நன்றாக ஓடிவருகின்றன. இதனால் ஓட்டு மொத்தத் தமிழ்ப் படங்களின் வசூலையும் சேர்த்து அள்ளிவந்த ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் வசூல் சற்று குறைந்துள்ளது.

இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை

கடந்த வாரம் வெளியான இன்று நேற்று நாளை, முதல் நாளில் சுமாரான ஓபனிங் பெற்று 35 லட்சத்தை வசூலித்தது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள், மற்றும் படத்தைப் பார்த்தவர்கள் கொடுத்த சான்றிதழ் போன்றவை காரணமாக படத்தின் வசூலானது அதிகரித்துள்ளது. மேலும் ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கு அடுத்த இடத்தை இன்று நேற்று நாளை திரைப்படம் வசூலில் தக்க வைத்துள்ளது.இதே வேகத்தில் படம் சென்றால் சென்னையில் ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் வசூல் சாதனையை, இன்று நேற்று நாளை படம் முந்தும் வாய்ப்பிருக்கிறது.

யாகாவராயினும் நாகாக்க

யாகாவராயினும் நாகாக்க

ஆதியின் யாகாவாராயினும் நாகாக்க திரைப்படமும் வசூலில் தொடர்ந்து, சாதனை படைத்தது வருகிறது, இன்று நேற்று நாளை திரைப்படத்திற்கு அடுத்த இடத்தை யாகாவராயினும் நாகாக்க திரைப்படம் பிடித்துள்ளது. முதல் நாளில் 30 லட்சத்தை வசூலித்த இந்தத் திரைப்படம் தொடர்ந்து வசூலில் ஏறுமுகத்திலேயே உள்ளது.

ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட் திரைப்படம் மூன்று வாரங்களைக் கடந்து வசூலில் தொடர்ந்து கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.இதுவரை 2.26 கோடியை வசூலித்து உள்ள ரோமியோ ஜூலியட், இன்னமும் அதிகமான காட்சிகளுடன் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவைப் பார்த்து வார இறுதி நாட்களில் காட்சிகளை அதிகப்படுத்தி வருகின்றனர் தியேட்டர் தரப்பினர்.

ஜுராசிக் வேர்ல்டுக்கு போட்டியாகுமா பாபநாசம்

ஜுராசிக் வேர்ல்டுக்கு போட்டியாகுமா பாபநாசம்

உலகநாயகன் கமல் நடிப்பில் இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது பாபநாசம் திரைப்படம், நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் பாபநாசம் மூலம் குடும்பத் தலைவராக நடித்திருக்கிறார் கமல். அதே போல பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நடிகை கவுதமி, இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பாபநாசம் வெற்றிப் படமாக மாறும் பட்சத்தில் சென்னையில் ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் வசூல் சாதனையைத் தகற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன பார்க்கலாம்.

English summary
Jurassic World Hollywood movie overpowered local movies as well in the capital city of Tamil Nadu last weekend. But Now This Movie Box Office Collection Down In Chennai Theatres.
Please Wait while comments are loading...