twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அர்த்தம் புரியல...ஆனாலும் சூப்பர்...சென்னை தமிழில் லோக்கலாக ஆட்டம் போட வைத்த தமிழ் சினிமா பாடல்கள்

    |

    சென்னை : தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு மாவட்டம் தமிழின் உச்சரிப்புக்கள் மாறுபடும். இதில் ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒருவர் பேசுவதை வைத்தே அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கும் அளவிற்கு அடையாளமாக மாறி விட்டது.

    எத்தனை ஊரில் தமிழை எத்தனை விதமாக பேசினாலும் சென்னையில் பேசப்படும் லோக்கல் தமிழ் தனி ரகம். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. முழுவதுமாக அர்த்தம் புரியாவிட்டாலும் இந்த தமிழ் அனைவரையும் ஈசியாக தொற்றிக் கொள்ளும்.

    சென்னை தினம் ஆகஸ்ட் 22 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த வேளையில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை லோக்கல் தமிழில் எழுதப்பட்டு, அனைவரையும் ரசிக்க வைத்த தமிழ் சினிமா பாடல்கைள இங்கே பார்க்கலாம்.

    கமல் சென்னை பாஷையில் கலக்குவதற்கு பிரபல காமெடி நடிகர் தான் காரணமாம்: இது குருவுக்கே குரு மொமண்ட்கமல் சென்னை பாஷையில் கலக்குவதற்கு பிரபல காமெடி நடிகர் தான் காரணமாம்: இது குருவுக்கே குரு மொமண்ட்

    வா வாத்தியாரே வூட்டாண்ட

    வா வாத்தியாரே வூட்டாண்ட

    1968 ம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் படத்தில் வரும் வா வாத்தியாரே வூட்டாண்ட என்ற பாடல் தற்போது வரை ஃபேமஸ். சென்னை தமிழ் என்றாலே இந்த பாடல் நிச்சயம் நினைவில் வரும். லோக்கல் சென்னை தமிழ் வார்த்தைகளை கொண்டு அமைக்கப்பட்ட இந்த பாடலை ஆலங்குடி சோமு எழுத, மனோரமா பாடி இருந்தார். சோவுடன் மனோரமா சேர்ந்து நடித்திருந்த இந்த ஒரு பாடலால் தான் மனோரமா மிகவும் ஃபேமஸ் ஆனார்.

    பேட்ட ராப்

    பேட்ட ராப்

    1994 ம் ஆண்டு ரிலீசான ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் வரும் பேட்ட ராப் பாடல் மிகவும் பிரபலமானது. சுரேஷ் பீட்டஸ், தேனி குஞ்சரம்பாள், வடிவேலு, ஷாகுல் ஹமீது ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர்கள் வரிசையாக சொல்லப்பட்டது இதற்கு மற்றொரு பிளசாக அமைந்தது.

    தங்க மாரி ஊதாரி

    தங்க மாரி ஊதாரி

    2017 ம் ஆண்டு ரிலீசான தனுஷின் அனேகன் படத்தில் இடம்பெற்ற தங்க மாரி ஊதாரி பாடல் லேட்டஸ்டாக ரிலீசாகி கலக்கிய பாடல். இந்த பாடலை ஹாரிஸ் ஜெயராஜ், தனுஷ், மரண கானா விஜி உள்ளிட்டோர் பாடி இருந்தனர்.

    மெர்சலாயிட்டேன்

    மெர்சலாயிட்டேன்

    ஷங்கரின் ஐ படத்தில் இடம்பெற்ற மெர்சலாயிட்டேன் பாடல் மாடர்ன் இசை, லோக்கல் வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், நீடி மோகன் ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். காதல் வயப்பட்ட சென்னை இளைஞர்களை மிகவும் கவர்ந்த பாடல் இது.

    காத்தடிக்குது காத்தடிக்குது

    காத்தடிக்குது காத்தடிக்குது


    1999 ம் ஆண்டு பிரபு தேவா, கீர்த்தி ரெட்டி, விவேக் உள்ளிட்டோர் நடித்த படம் நினைவிருக்கும் வரை. இந்த படத்தில் தேவா இசையில் அமைந்த காத்தடிக்குது காத்தடிக்குது பாடல் அந்த சமயத்தில் செம ஹிட்டானது. தேவா, சபேஷ், கிருஷ்ணராஜ் ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடி இருந்தனர்.

    எங்க ஏரியா உள்ள வராத

    எங்க ஏரியா உள்ள வராத

    2006 ம் ஆண்டு தனுஷ் நடித்து வெளிவந்த புதுப்பேட்டை படத்தில் எங்க ஏரியா உள்ள வராத பாடலில் பாடலின் வரிகள் மட்டுமல்ல, பாடலில் தனுஷின் ஆட்டமும் தரை லோக்கலாக இருக்கும். சென்னையில் உள்ள முக்கிய ஏரியாக்களின் பெயர்களை மட்டுமே வைத்து இந்த பாடல் அமைக்கப்பட்டிருக்கும். தனுஷ், பிரேம்ஜி அமரன், யுவன்சங்கர் ராஜா, ராஜு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடினர்.

    பத்தல பத்தல

    பத்தல பத்தல

    சமீபத்தில் ரிலீசான கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான விக்ரம் படத்தில் வரும் பத்தல பத்தல பாடல் செம லோக்கல் வார்த்தைகளை வைத்து எழுதப்பட்டிருக்கும். இந்த பாடலை கமலை எழுதி, அவரே பாடி இருந்தார். அவருடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் சர்ச்சைகளை ஒரு புறம் சந்தித்தாலும் மற்றொரு புறம் ரசிகர்களை செமையாக ஆட்டம் போட வைத்தது.

    English summary
    Chennai day or Madras day will celebrate on August 22nd. During this special occassion here we listed out some tamil cinema songs which are made up of local Chennai slang lyrics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X