»   »  அன்பார்ந்த பொது மக்களே இவற்றையும் கொஞ்சம் கொடுத்து உதவலாமே..வேண்டுகோள் விடுக்கும் நடிகர் சங்கம்

அன்பார்ந்த பொது மக்களே இவற்றையும் கொஞ்சம் கொடுத்து உதவலாமே..வேண்டுகோள் விடுக்கும் நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உணவுகளைத் தவிர மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களையும் கொடுத்து உதவுங்கள் என்று நன்கொடையாளர்களுக்கு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கபட்ட சென்னை மக்களுக்கு உதவும் பொருட்டு பல்வேறு நடிக, நடிகையரும் களத்தில் குதித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோரும் நடிகர் சங்கத்தில் உள்ளவர்களை ஒன்றிணைத்து சென்னை மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றனர்.

சென்னை மக்கள்

சென்னை மக்கள்

கடந்த சில வாரங்களாக கனமழை பெய்ததால் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட சென்னை மற்றும் கடலூர் மக்களின் பாதிப்பு பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. தற்போது மழையின் வேகம் சற்றே குறைந்த போதிலும் வெள்ளநீர் தேக்கம் மற்றும் ஏரிகள் உடைப்பு ஆகியவை காரணமாக மக்களின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நடிகர் சங்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்படும் சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு உதவும் பொருட்டு தற்போது நடிகர் சங்கமும் களமிறங்கி இருக்கிறது. நடிகர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் பிற நடிகர், நடிகைகளை ஒன்றிணைத்து தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

உணவு அதிகம் உள்ளது

உணவு அதிகம் உள்ளது

இந்நிலையில் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் சமூக வலைதளங்களில் பின்வரும் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். "பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.ஆனால் மக்களுக்குத் தேவைப்படும் குடிநீர், டூத் பிரஷ், மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகள்,ஓடோமாஸ், சமையல் செய்யும் பாத்திரங்கள், தட்டுகள், டம்ளர்கள், பிளீச்சிங் பவுடர் மற்றும் டார்ச் லைட்கள் ஆகியவை அதிகமாக தேவைப்படுகிறது.இவற்றை பொதுமக்கள் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்".

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு

"எங்களது கன்ட்ரோல் ரூம் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் இயங்குகிறது. உதவிகள் வழங்க நினைப்போர் அங்கே வந்து கொடுத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் நேரடியாக அளித்து விடுகிறோம்" என்று நடிகர் விஷால் நேரடியாகவும், சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்னையைத் தொடர்ந்து கடலூர் மக்களுக்கும் உதவிகள் புரிந்திட நடிகர் சங்கத்தினர் விரைவில் அங்கே செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai Rain: Actor Vishal Request to Public People in all Social Networks.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil