»   »  சென்னை மழை: தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு உதவிய வித்யூலேகா

சென்னை மழை: தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு உதவிய வித்யூலேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை வித்யூலேகா தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உதவிகளை வழங்கி இருக்கிறார்.

சென்னை மற்றும் கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிக, நடிகையர் பலரும் ஆர்வத்துடன் உதவிகள் செய்து வருகின்றனர்.

நடிகர்கள் சித்தார்த், ஆர் ஜே பாலாஜி,விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன்,மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் மக்களுக்கு நேரடியாக தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை வித்யூலேகாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை பூமிகா டிரஸ்ட் என்ற அமைப்புடன் இணைந்து வழங்கியிருக்கிறார்.

நடிகை வித்யூலேகா இது குறித்து கூறும்போது "சென்னைக்கும், தமிழ்நாட்டுக்கு இது மிகவும் மோசமான நேரம். ஆனாலும், நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்யவேண்டும்.

இந்த உலகத்தில் அதைவிட மிகப்பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது. நான் பூமிகா டிரஸ்ட்டுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ததை பெருமையாக கருதுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

English summary
Chennai Rain: Actress Vidyulekha Wrote on Twitter "Best feeling in the world. Organizing mass packing of provisions for homes everyday".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil