»   »  சென்னை மழை: மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி

சென்னை மழை: மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட வாட்ஸ் ஆப் மூலம் கை கோர்ப்போம் வாருங்கள் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு நடிகர் சித்தார்த், சின்மயி ஆகியோருடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி உதவிகளை வழங்கி வருகிறார்.

Chennai Rain: RJ Balaji Request to Public

இந்நிலையில் வெறும் உணவு, உடை மட்டுமே அவர்களின் அத்தியாவசியத் தேவையன்று அவர்களின் வாழ்வாதரங்களையும் நாம் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஆர் ஜே பாலாஜி சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்தார்.

அவரின் இந்த கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இதில் பணியாற்ற பலரும் ஆர்வமுடன் முன்வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர் ஜே பாலாஜி ஓர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

"எங்களுடன் இணைந்து மக்களின் வாழ்வாதரங்களை புனரமைக்க விரும்புவோர் உங்கள் பெயர், ஏரியா ஆகியவற்றை கீழ்க்கண்ட நம்பருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வையுங்கள்.

சென்னை மைக்ரோ என்ற பெயருக்கு நீங்கள் அனுப்பி வைத்தால், நாங்களே உங்களைத் தொடர்பு கொள்வோம். தயவு செய்து போன் செய்ய வேண்டாம் என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியிருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோர் 90431 32911 என்ற மொபைல் நம்பருக்கு வாட்ஸ் ஆப் செய்யலாம்!

English summary
Actor RJ Balaji wrote on Twitter "Those who want to volunteer in our rehabilitation work, whatsapp ur name n area wit #ChennaiMicro to 90431 32911. Plz dont cal.We wil cal u".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil