»   »  சென்னையில் ஏன் பாலியல் தொழிலை சட்டப்படி அனுமதிக்கக் கூடாது?: புரியாத புதிர் தயாரிப்பாளர்

சென்னையில் ஏன் பாலியல் தொழிலை சட்டப்படி அனுமதிக்கக் கூடாது?: புரியாத புதிர் தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பையில் பாலியல் தொழில் சட்டப்படி செல்லும் என்கிறபோது சென்னையில் மட்டும் அப்படி ஏன் இல்லை என பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

செக்ஸ் கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் இன்னும் ரிலீஸாகாமலேயே உள்ளது. யுரேகா இயக்கத்தில் சான்ட்ரா ஏமி நடித்துள்ள இந்த படத்தை விஜய் சேதுபதியின் புரியாத புதிர் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் தயாரித்துள்ளார்.


இது குறித்து சதீஷ் கூறுகையில்,


சிவப்பு எனக்கு பிடிக்கும்

சிவப்பு எனக்கு பிடிக்கும்

பிற பட வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. செக்ஸ் கல்வி மற்றும் நகரில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு

சிவப்பு

சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் குறித்து பலர் என்னை கேள்வி கேட்டார்கள். சிவப்பு என்பதில் ஒரு கருத்து உள்ளது என்று அவர்களுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டியதாகிவிட்டது.


சான்ட்ரா ஏமி

சான்ட்ரா ஏமி

படத்தில் சான்ட்ரா ஏமி பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். இயக்குனர் யுரேகா பத்திரிகையாளராக நடித்துள்ளார். பாலியல் தொழிலாளிகள் விரும்பி ஒன்றும் இந்த தொழிலுக்கு வருவது இல்லை என்பதை தெரிவித்துள்ளோம்.


சென்னை

சென்னை

சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி இருக்க வேண்டும். மும்பையில் பாலியல் தொழில் சட்டப்படி செல்லும் என்கிறபோது சென்னையில் மட்டும் அப்படி ஏன் இல்லை?


ஏ சான்றிதழ்

ஏ சான்றிதழ்

படத்தை பார்த்த சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தில் ஆபாச காட்சிகள் எதுவும் இல்லை ஆனால் இது பெரியவர்களுக்கான படம் என்பதால் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை சென்சார் போர்டு வெகுவாக பாராட்டியது என சதீஷ் தெரிவித்தார்.
English summary
Sivappu Enaku Pidikkum producer JSK Sathish said that Chennai should have a red light area of its own.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil