»   »  கபாலி ரிலீஸ்: ஊழியர்களுக்காக மொத்த டிக்கெட்டையும் புக் செய்யும் தனியார் நிறுவனங்கள்

கபாலி ரிலீஸ்: ஊழியர்களுக்காக மொத்த டிக்கெட்டையும் புக் செய்யும் தனியார் நிறுவனங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி படத்தினை ரிலீஸ் தினத்தன்றே முதல்நாள் முதல்காட்சி பார்க்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசையாகும். தலைவர் படம் பார்க்கப் போறேன் என்பதுதான் இப்போதைக்கு பலரது பேச்சாக உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்கும் ரஜினி... எதிலும் ரஜினியாக உள்ளார்.

கபாலியை பார்க்க தொழிலாளி முதல் முதலாளி வரை ஆவலாக உள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்காக 'கபாலி' படத்தை காண நிறுவனம் சார்பில் திரையரங்கின் அனைத்து டிக்கெட்களையும் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'கபாலி' படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனை முன்னிட்டு சென்னை, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பல நிறுவனங்கள் சார்பில் 'முதல் நாள் முதல் காட்சி' பார்க்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

தலைவர் ரசிகர்களான பாஸ்கள், சக ஊழியர்களுக்காக அனைத்து டிக்கெட்களையும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரஜினி பட டிக்கெட்

ரஜினி பட டிக்கெட்

ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவளிக்கும் மென்பொருளான 'பிரெஷ்டெஸ்க்', இதனை ஒரு வழக்கமாக வைத்து, ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போது டிக்கெட் ஏற்பாடு செய்ய உதவிவருகிறது.

மொத்த டிக்கெட்

மொத்த டிக்கெட்

ரஜினிகாந்த் நடித்த 'குலேசன்', 'லிங்கா', 'கோச்சடையான்' உள்ளிட்ட படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்களை ஊழியர்களுக்காக பெற்றுத் தந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரீஸ் மாத்ருபூதம் கூறியுள்ளார்.

முதல்நாள் முதல் காட்சி

முதல்நாள் முதல் காட்சி

கபாலியின் முதல்நாள் முதல் காட்சிக்காக ஜூலை 22ம் தேதியன்று சனிக்கிழமை தங்களது ஊழியர்களை படத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சத்யம் திரையரங்க உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் 600 பேர் அமரும் இருக்கை வசதியுடன் ஊழியர்களுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்து தர முயற்சிப்பதாக பிரெஷ் டெஸ்க் விளம்பரத்துறை தலைவர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் உடைகள்

ரஜினிகாந்த் உடைகள்

ரஜினி ரசிகர்கள் நிறைந்துள்ள ஒரு நிறுவனத்தில் கபாலி படத்தை வரவேற்கும் விதமாக வரும் ஜூலை 21ம் தேதி ரஜினி காஸ்ட்டுயூம் டே கொண்டாடுகின்றனர். ரஜினி அணிந்த ஸ்டைல் ஆடைகளை அணிந்து அலுவலகத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார்களாம்.

கபாலி டி சர்ட்

கபாலி டி சர்ட்

கபாலி உருவம் பொறித்த டி சர்ட்கள் ஏற்கனவே விற்பனை வந்துள்ளன. அவற்றை ரசிகர்களை வாங்கி அணிய தொடங்கிவிட்டனர். இன்னும் 3 தினங்களுக்கு ஒரே கபாலி மயமாகத்தான் இருக்கப் போகிறது.

English summary
On July 22, fans of superstar Rajinikanth working in Tamil Nadu's capital will wish they were employed at a startup.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil