»   »  ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்...: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன்னிடம் கெஞ்சும் இளம் இயக்குனர்

ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்...: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன்னிடம் கெஞ்சும் இளம் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன்னிடம் கெஞ்சும் இளம் இயக்குனர்- வீடியோ

சென்னை: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட பைரசி இணையதளங்களுக்கு சென்னை2சிங்கப்பூர் பட இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுமுகம் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் சென்னை2சிங்கப்பூர். எந்த படம் ரிலீஸானாலும் அன்றைய தினம் அல்லது மறுநாள் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடும்.

இந்நிலையில் அப்பாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன்னுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்ட வீடியோவில் அப்பாஸ் கூறியிருப்பதாவது,

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

நான் சென்னை2சிங்கப்பூர் பட டைரக்டர் அப்பாஸ் அக்பர். தமிழ் ராக்கர்ஸ, தமிழ் கன் மற்ற பைரசி சைட்ஸ் எல்லாருக்கும் நான் உங்களிடம் நேரடியாக பேசுகிறேன்.

ரூ.8 கோடி

சென்னை2சிங்கப்பூர் 6 வருடங்களுக்கு முன்பு துவங்கிய படம். 6 வருஷமாக உழைச்சிருக்கிறோம். இந்த படத்திற்கு ரூ.8 கோடி செலவாகியுள்ளது. ஸ்டாரே இல்லை என்றாலும் ரூ. 8 கோடி செலவு செய்த பணத்தை ஒரு வாரத்தில் வசூலித்துவிட முடியாது.

குறை

குறை

வேர்ட் ஆப் மவுத் பரவ வேண்டும். அந்த வியர்வை, அந்த வலி வந்து இப்ப உங்க சைட்டில் இருக்கிறது. நாங்க பட்ட கஷ்டங்களை இந்த வீடியோவில் சொல்ல நேரம் போதாது. அதை சொல்லவும் கூடாது. ஏனென்றால் கஷ்டப் படணும் என்று முடிவு செய்துவிட்டு இங்கு வந்து குறை சொல்லக் கூடாது.

இயக்குனர்

இயக்குனர்

அய்யோ வலிக்குதே, குத்துதே என்று சொல்லக் கூடாது, ஃபேஸ் பண்ண வேண்டும். ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படம் உங்களிடம் உள்ளது. அதை பாருங்க. அது ஜெயிக்காமல் இருப்பதற்கு காரணமே கிடையாது. ஒரு இயக்குனராக இது என் தனிப்பட்ட கோரிக்கை. தயவு செய்து ஒரு 30 நாள் இந்த படத்தை வெளியே எடுங்க. 31வது நாள் சைட்டில் அப்லோடு செய்யுங்கள். அது போதும். இதை தான் நான் கேட்கிறேன். தயவு செய்து செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அப்பாஸ்.

English summary
Chennai2Singapore director Abbas Akbar has requested Tamil Rockers, Tamil Gun and other piracy sites to remove his movie and upload it after 30 days. He has released a video requesting the piracy sites to help him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X