Don't Miss!
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Finance
budget 2023: தொடரும் நம்பிக்கை..சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
செக் மோசடி வழக்கு..இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை.. சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு!
சென்னை : செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்த லிங்குசாமி இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை இயக்கினார். மம்முட்டி,முரளி, அப்பாஸ்,தேவயானி என பல முன்னணி நடிகர் நடித்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்து வெற்றி பெற்றது.
முதல் படத்திலேயே பெரும் வெற்றியை பெற்ற இவர் அடுத்ததாக மாதவன் நடித்த ரன்,அஜித் நடித்த ஜி,விஷால் நடித்த சண்டக்கோழி,விக்ரம் நடித்த பீமா,கார்த்தியின் பையா என்று வெற்றி படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.
டாப் நடிகர்களின் அட்டகாசங்களை வெப்சீரிஸில் அம்பலப்படுத்திய இயக்குநர்.. அந்த காண்டு தான் காரணமா?

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் மட்டுமின்றி சில படங்களை தயாரித்து அசத்தியுள்ளார் லிங்குசாமி 2015-ல் சூர்யா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை,இதனால் கடந்த சில வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த லிங்குசாமி,விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

தி வாரியர்
இதனை தொடர்ந்து மீண்டும் வெற்றி இயக்குநராக வரவேண்டும் என அடுத்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் க்ரித்தி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி தமிழ், தெலுங்குயில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

செக் மோசடி
இந்நிலையில் பிரபல இயக்குநர் லிங்குசாமி செக் மோசடி செய்ததற்காக ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமி கார்த்தி, சமந்தாவை வைத்து எண்ணி ஏழு நாள் என்ற திரைப்படத்திற்காக பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.103 கோடி கடனாக பெற்றிருந்தார். கடனை திருப்பி கேட்ட போது அதற்காக செக் கொடுத்துள்ளார் லிங்குசாமி. ஆனால், அந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி இருக்கிறது.

6 மாதம் சிறை
இதனால், லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் செக் மோடி வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.