»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சினிமா இயக்குனர் சேரன் மீது திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் நிஷா கூறிய கற்பழிப்பு புகாரில் உண்மை இல்லைஎன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சுந்தரமூர்த்தி கூறினார்.

திருச்சி உறையூர் கீழக்கொல்லை தெருவை சேர்ந்த ரகமத்துன்னிஷா, தன்னை சினிமா இயக்குநர்கள் சேரன்,தங்கர்பச்சான் இருவரும் கற்பழித்ததாக போலீஸில் புகார் கூறினார். இதனையடுத்து போலீசார் சினிமாஇயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் இந்த விசாரணை குறித்து சுந்தரமூர்த்தி கூறியதாவது:

கற்பழிப்புப் புகார் தொடர்பான விசாரணையில் சேரன் மீது நிஷா கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதுதெரிய வந்துள்ளது. சேரன் திருச்சி ஓட்டலில் எந்த தேதி, எந்த அறை வைத்து தன்னைக் கற்பழித்தார் என்பதைநிஷா புகாரில் கூறி இருந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது தேதி, தங்கிய அறை எல்லாமே தவறாக இருந்ததுதெரியவந்தது. இப்போது சேரன் மீது நிஷா ஏன் இந்த பொய்க் கற்பழிப்பு புகார் கூறினார் என்பதை நாங்கள்விசாரித்து வருகிறோம்.

தங்கர்பச்சான் தன்னை சென்னையில் வைத்து கற்பழித்ததாக கூறி இருந்தார். இதுகுறித்து தனிப்படை போலீசார்சென்னை சென்று விசாரிக்க உள்ளனர் என்று கூறினார்.

Read more about: awards, chennai, cheran, cinema, film, movie, news, rape

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil