»   »  சேரனின் டூரிங் டாக்கீஸ்ஆட்டோகிராப் போட்டு தமிழ் சினிமாவை கலக்கிய சேரன், இப்போது அடுத்த படத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.சமூக பொறுப்புள்ள இயக்குநர்கள் என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட சேரனும், தங்கர்பச்சானும்நிஷா என்ற பெண் சுமத்திய கற்பழிப்புக் குற்றச்சாட்டினால் மனம் நொந்து போனார்கள்.அது ஆதாரமற்ற பொயக் குற்றச்சாட்டு என்று நிரூபிக்கப்பட்ட பின்புதான் இருவரும் சகஜ நிலைக்குத்திரும்யுள்ளனர். தங்களது வெற்றிக்குக் கொடுத்த விலை அதிகம்தான் என்றாலும், மனதைத் தேற்றியபடி அவரவர்வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்."திருடா திருடி" படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போகிறார் சேரன்.சினிமாவை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்ட ஒருவனின் போராட்டங்கள், வெற்றிகள், தோல்விகளை மையமாகக்கொண்டு டூரிங் டாக்கீஸ் என்ற கதையை உருவாக்கியிருக்கிறார்.ஒவ்வொரு படத்திலும் ஒரு மெசேஜ் சொல்லும் சேரன் இந்தப் படத்தில் சினிமாவை நம்பி வரும் இளைஞர்களுக்குமெசேஜ் சொல்லப் போகிறார்.இந்தப் படம் அனைவராலும் விரும்பப்படும் என்று அதீத நம்பிக்கையுடன் கூறும் சேரன், தமிழ் சினிமாரசிகர்களுக்கு, திரைப்படங்கள் மீதும், திரைத்துறை மீதும் புதிய மரியாதையை இந்தப் படம் ஏற்படுத்திக்கொடுக்கும் என்கிறார். படத்தின் முக்கிய வேடத்தில் ராஜேஷ் நடிக்கவுள்ளார். சேரனுக்கு ஜோடியாக இரண்டு பேர் நடிக்கவுள்ளனர்.அவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்திற்கு தேவாவின் சகோதரர்கள் சபேஷ்-முரளிஇசையமைக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.இந்தப் படம் முடிந்ததும் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் பொக்கிஷம் என்ற படத்தை இயக்கிப் போகிறார்சேரன். இதிலும் கதாநாயகன் அவரே.சேரனைப் போலவே இயக்குனர் தங்கர்பச்சானும் தனது அடுத்த படத்தில் பிஸியாகி விட்டார். தாய்மண் என்றுபடத்திற்குப் பெயரிட்டிருக்கிறார். ராணுவத்தில் பணியாற்றி விட்டு கிராமத்திற்குத் திரும்பும் ஒரு மனிதனைச் சுற்றிகதையை அமைத்திருக்கிறார்.படம் டெல்லியில் ஆரம்பித்து பண்ரூட்டியில் முடிகிறது. வழக்கமான படங்களை விட நிச்சயம் மாறுபட்டிருக்கும்என்று தங்கர்பச்சான் அடித்துச் சொல்கிறார்.இப்படி ஆளுக்கு ஒரு படத்தில் தீவிரமாகிவிட்டாலும், சேரனும் தங்கர்பச்சானும் இலங்கைத்தமிழர்களை வைத்து ஒரு படம் பண்ணும் ஆசையில் இருக்கிறார்களாம். தங்கர்பச்சானின்இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் ஆர்வம்காட்டியிருக்கிறாராம். அது குறித்து பேச்சு நடந்து வருகிறது.சேரனோ இலங்கைத் தமிழர்களையே நடிக்க வைத்தே ஒரு படம் செய்யலாமா என்று யோசிப்பதாகசொல்கிறார்கள்.

சேரனின் டூரிங் டாக்கீஸ்ஆட்டோகிராப் போட்டு தமிழ் சினிமாவை கலக்கிய சேரன், இப்போது அடுத்த படத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.சமூக பொறுப்புள்ள இயக்குநர்கள் என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட சேரனும், தங்கர்பச்சானும்நிஷா என்ற பெண் சுமத்திய கற்பழிப்புக் குற்றச்சாட்டினால் மனம் நொந்து போனார்கள்.அது ஆதாரமற்ற பொயக் குற்றச்சாட்டு என்று நிரூபிக்கப்பட்ட பின்புதான் இருவரும் சகஜ நிலைக்குத்திரும்யுள்ளனர். தங்களது வெற்றிக்குக் கொடுத்த விலை அதிகம்தான் என்றாலும், மனதைத் தேற்றியபடி அவரவர்வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்."திருடா திருடி" படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போகிறார் சேரன்.சினிமாவை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்ட ஒருவனின் போராட்டங்கள், வெற்றிகள், தோல்விகளை மையமாகக்கொண்டு டூரிங் டாக்கீஸ் என்ற கதையை உருவாக்கியிருக்கிறார்.ஒவ்வொரு படத்திலும் ஒரு மெசேஜ் சொல்லும் சேரன் இந்தப் படத்தில் சினிமாவை நம்பி வரும் இளைஞர்களுக்குமெசேஜ் சொல்லப் போகிறார்.இந்தப் படம் அனைவராலும் விரும்பப்படும் என்று அதீத நம்பிக்கையுடன் கூறும் சேரன், தமிழ் சினிமாரசிகர்களுக்கு, திரைப்படங்கள் மீதும், திரைத்துறை மீதும் புதிய மரியாதையை இந்தப் படம் ஏற்படுத்திக்கொடுக்கும் என்கிறார். படத்தின் முக்கிய வேடத்தில் ராஜேஷ் நடிக்கவுள்ளார். சேரனுக்கு ஜோடியாக இரண்டு பேர் நடிக்கவுள்ளனர்.அவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்திற்கு தேவாவின் சகோதரர்கள் சபேஷ்-முரளிஇசையமைக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.இந்தப் படம் முடிந்ததும் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் பொக்கிஷம் என்ற படத்தை இயக்கிப் போகிறார்சேரன். இதிலும் கதாநாயகன் அவரே.சேரனைப் போலவே இயக்குனர் தங்கர்பச்சானும் தனது அடுத்த படத்தில் பிஸியாகி விட்டார். தாய்மண் என்றுபடத்திற்குப் பெயரிட்டிருக்கிறார். ராணுவத்தில் பணியாற்றி விட்டு கிராமத்திற்குத் திரும்பும் ஒரு மனிதனைச் சுற்றிகதையை அமைத்திருக்கிறார்.படம் டெல்லியில் ஆரம்பித்து பண்ரூட்டியில் முடிகிறது. வழக்கமான படங்களை விட நிச்சயம் மாறுபட்டிருக்கும்என்று தங்கர்பச்சான் அடித்துச் சொல்கிறார்.இப்படி ஆளுக்கு ஒரு படத்தில் தீவிரமாகிவிட்டாலும், சேரனும் தங்கர்பச்சானும் இலங்கைத்தமிழர்களை வைத்து ஒரு படம் பண்ணும் ஆசையில் இருக்கிறார்களாம். தங்கர்பச்சானின்இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் ஆர்வம்காட்டியிருக்கிறாராம். அது குறித்து பேச்சு நடந்து வருகிறது.சேரனோ இலங்கைத் தமிழர்களையே நடிக்க வைத்தே ஒரு படம் செய்யலாமா என்று யோசிப்பதாகசொல்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

ஆட்டோகிராப் போட்டு தமிழ் சினிமாவை கலக்கிய சேரன், இப்போது அடுத்த படத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

சமூக பொறுப்புள்ள இயக்குநர்கள் என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட சேரனும், தங்கர்பச்சானும்நிஷா என்ற பெண் சுமத்திய கற்பழிப்புக் குற்றச்சாட்டினால் மனம் நொந்து போனார்கள்.

அது ஆதாரமற்ற பொயக் குற்றச்சாட்டு என்று நிரூபிக்கப்பட்ட பின்புதான் இருவரும் சகஜ நிலைக்குத்திரும்யுள்ளனர். தங்களது வெற்றிக்குக் கொடுத்த விலை அதிகம்தான் என்றாலும், மனதைத் தேற்றியபடி அவரவர்வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

"திருடா திருடி" படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போகிறார் சேரன்.சினிமாவை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்ட ஒருவனின் போராட்டங்கள், வெற்றிகள், தோல்விகளை மையமாகக்கொண்டு டூரிங் டாக்கீஸ் என்ற கதையை உருவாக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு படத்திலும் ஒரு மெசேஜ் சொல்லும் சேரன் இந்தப் படத்தில் சினிமாவை நம்பி வரும் இளைஞர்களுக்குமெசேஜ் சொல்லப் போகிறார்.

இந்தப் படம் அனைவராலும் விரும்பப்படும் என்று அதீத நம்பிக்கையுடன் கூறும் சேரன், தமிழ் சினிமாரசிகர்களுக்கு, திரைப்படங்கள் மீதும், திரைத்துறை மீதும் புதிய மரியாதையை இந்தப் படம் ஏற்படுத்திக்கொடுக்கும் என்கிறார்.

படத்தின் முக்கிய வேடத்தில் ராஜேஷ் நடிக்கவுள்ளார். சேரனுக்கு ஜோடியாக இரண்டு பேர் நடிக்கவுள்ளனர்.அவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்திற்கு தேவாவின் சகோதரர்கள் சபேஷ்-முரளிஇசையமைக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்தப் படம் முடிந்ததும் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் பொக்கிஷம் என்ற படத்தை இயக்கிப் போகிறார்சேரன். இதிலும் கதாநாயகன் அவரே.

சேரனைப் போலவே இயக்குனர் தங்கர்பச்சானும் தனது அடுத்த படத்தில் பிஸியாகி விட்டார். தாய்மண் என்றுபடத்திற்குப் பெயரிட்டிருக்கிறார். ராணுவத்தில் பணியாற்றி விட்டு கிராமத்திற்குத் திரும்பும் ஒரு மனிதனைச் சுற்றிகதையை அமைத்திருக்கிறார்.

படம் டெல்லியில் ஆரம்பித்து பண்ரூட்டியில் முடிகிறது. வழக்கமான படங்களை விட நிச்சயம் மாறுபட்டிருக்கும்என்று தங்கர்பச்சான் அடித்துச் சொல்கிறார்.

இப்படி ஆளுக்கு ஒரு படத்தில் தீவிரமாகிவிட்டாலும், சேரனும் தங்கர்பச்சானும் இலங்கைத்தமிழர்களை வைத்து ஒரு படம் பண்ணும் ஆசையில் இருக்கிறார்களாம். தங்கர்பச்சானின்இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் ஆர்வம்காட்டியிருக்கிறாராம். அது குறித்து பேச்சு நடந்து வருகிறது.

சேரனோ இலங்கைத் தமிழர்களையே நடிக்க வைத்தே ஒரு படம் செய்யலாமா என்று யோசிப்பதாகசொல்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil