twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேரனின் சி2ஹெச் சினிமாவைக் காப்பாற்றும்: பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், அமீர்

    By Mayura Akilan
    |

    சென்னை: திரைப்படங்களை நேரடியாக வீட்டிற்கு கொண்டு செல்லும் இயக்குநர் சேரனின் சி2ஹெச் என்ற முயற்சிக்கு இயக்குநர்கள் பாரதிராஜா,பாக்கியராஜ், சீமான், அமீர் உள்ளிட்டோர் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.

    திரைப்படம் என்பது திரையரங்கத்தில் பார்க்க வேண்டிய விஷயம் தான் என்றாலும், இன்று செல்போனில் படம் பார்க்கும் வரை நிலை மாறிவிட்டது.
    இன்றைக்கு எடுக்கப்படும் திரைப்படங்கள் ரிலீஸாகும் முன்பே இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது. தவிர திருட்டு விசிடிகளும் வெளியாகி சினிமா தொழிலை அழிவின் விளிம்பிற்கு தள்ளிக்கொண்டிருக்கிறது.

    இவை தவிர ஏராளமான திரைப்படங்கள் திரைப்படங்களில் வெளிவர முடியாமல் போய்விடுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் தள்ளப்படுகின்றனர்.

    சேரனின் சி2ஹோம்

    சேரனின் சி2ஹோம்

    இதற்கான மாற்று வழி என்ன என்பதை பல நாட்களாக ஆய்வு செய்து, ஒரு ஆவணப்படம் எடுத்ததோடு, ‘சினிமா டூ ஹோம்' என்ற புதிய நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் இயக்குனர் சேரன்.

    ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை

    ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை

    சேரன் தயாரித்து இயக்கிய ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படம் ரிலீஸாக தயார் நிலையில் இருந்து அதை வாங்கி வெளியிட திரையரங்கம் எதுவும் கிடைக்காமல் சிரமத்தில் இருந்தார் சேரன்

    குறைவான விலையில் சி.டிக்கள்

    குறைவான விலையில் சி.டிக்கள்

    திருட்டு வி.சி.டி.கள் பெருகிப்போனதாலும், திரையரங்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப் படுவதாலும் ரசிகர்கள் திரையரங்கம் வராமல் வீட்டிலேயே படம் படம் பார்க்க பழகிவிட்டார்கள். எனவே, ஒரிஜினல் சி.டி.யை குறைவான விலை கொடுத்தால் என்ன? என்ற கேள்வியால் பிறந்ததே இந்த ‘சி டூ ஹெச்' நிறுவனம் என்கிறார் இயக்குனர் சேரன்.

    திருட்டு விசிடி ஒழியும்

    திருட்டு விசிடி ஒழியும்

    திருட்டு வி.சி.டி-யால் யார் யார் எந்த அளவு சம்பாதிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்ட சேரன், அது அத்தனையும் தயாரிப்பாளருக்கு வந்து சேர இந்த நிறுவனம் வழிகள் செய்யும் என்றும் இந்த விழாவில் சேரன் தெரிவித்தார்.

    வீட்டிற்கு புதுப்படங்கள்

    வீட்டிற்கு புதுப்படங்கள்

    சேரனின் ஜே.கே படத்தையும் சேர்த்து சிவப்பு எனக்கு பிடிக்கும், ஆள், மேகா, அப்பாவின் மீசை என ஐந்து படங்களை முதல்கட்டமாக வெளியிட உள்ளது 'சி டூ ஹெச்'.

    அனைவரும் ஒத்துழைப்பு

    அனைவரும் ஒத்துழைப்பு

    இதற்கு அனைத்து திரைப்பட விநியோகஸ்தர்களும், கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இதன் அறிமுக விழாவில் சொன்னார் சேரன். மேலும் அவர் இது திரையரங்க உரிமையாளார்களுக்கு எதிரானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    இயக்குநர்கள் பாராட்டு

    இயக்குநர்கள் பாராட்டு

    விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே.ஆர், இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், அமீர், கே.எஸ்.ரவிக்குமார், தங்கர்பச்சான் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு பாராட்டினர்.

    சேரன் செய்த புரட்சி

    சேரன் செய்த புரட்சி

    விழவில் பேசிய சீமான், சேரனின் படம் எப்போது வரும் என்று காத்திருந்த காலம் போய் இன்றைக்கு அவருடைய படத்தினை திரையிட முடியாமல் போய்விட்டது. இன்றைக்குசேரன் மிகப்பெரிய புரட்சி செய்துள்ளார் என்றார்.

    திரை உலகை காக்கவேண்டும்

    திரை உலகை காக்கவேண்டும்

    சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் இந்த திரை உலகை காக்கவேண்டும். இன்றைக்கு சேரன் போன்ற கலைஞரை தமிழ் திரையுலகம் காப்பாற்ற வேண்டும். தமிழ் திரைஉலகின் பொக்கிஷம் சேரன், லிங்குசாமி, தங்கர்பச்சான், பாலா, பாலாஜி சக்திவேல்.

    திரைக்கலைஞர்களை தத்தெடுக்கவேண்டும்

    திரைக்கலைஞர்களை தத்தெடுக்கவேண்டும்

    எடுத்த படத்தை திரைக்கு கொண்டு போவதே ஒரு போராட்டமாக உள்ளது. ஒரு கலைஞனின் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும்.
    சிறந்த திரைக்கலைஞர்களை அரசு தத்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் சீமான்.

    அனைத்து வசதிகளும்

    அனைத்து வசதிகளும்

    அமைச்சர்களுக்கு கொடுப்பதைப் போல அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டும்.
    சேரனைப் போன்ற கலைஞர்கள் சிதைந்து அழிவதை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழனின் வேட்டி கூட உருவப்படுகிறது. நீதியரசரசால் வேட்டி அணிந்து போகமுடியாத நிலை உள்ளது.

    நமக்கு கடமை இருக்கிறது

    நமக்கு கடமை இருக்கிறது

    நமக்கு அனைவருக்கும் கடமை உள்ளது. நாம் நேசித்த சினிமா அழியாமல் காப்பது நமது கடமை. சேரன் முயற்சிக்கு அனைத்து வழிகளிலும் நான் துணை நிற்பேன். தவமாய் தவமிருந்து இதை உருவாக்கியுள்ளார் அவருடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றார் சீமான்.

    பாராட்டிய பாரதிராஜா

    பாராட்டிய பாரதிராஜா

    நாம் எதைக் கொண்டுவந்தோம் அதை இழக்க. இது புதிய முயற்சி. சேரனுக்குப் பாராட்டுக்கள் என்றார் பாராதிராஜா. காலமாற்றங்களில் எது மூடப்படுமோ அது மூடப்பட வேண்டும். எது திறக்கப்படுமோ அது திறக்கப்படவேண்டும். இதுதான் விதி.

    தியேட்டர் அரசியல்

    தியேட்டர் அரசியல்

    படைப்பாளி என்பவன் சுதந்திர சிந்தனையாளன்.
    என்னுடைய படங்கள் வந்த தடம் தெரியாமல் போவதற்குக் காரணம் தியேட்டர்களில் நடைபெற்ற அரசியல்தான். பொம்மலாட்டம், அன்னக்கொடி, படங்கள் தோல்வியடையக் காரணம் இதுதான்.

    திரைக்கலைஞர்கள் ஒற்றுமை தேவை

    திரைக்கலைஞர்கள் ஒற்றுமை தேவை

    தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சங்கம், நடிகர் சங்கம் என்று அமைப்புகளை மாற்றவேண்டும் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து சேரனை காக்க வேண்டும் சேரனின் பாதை சரியாக இருக்கும் என்னும் கூறினார்.

    பாக்யராஜ் வாழ்த்து

    பாக்யராஜ் வாழ்த்து

    சினிமா இன்றைக்கு மோசமான சூழ்நிலையில் உள்ளது. சினிமா எடுப்பவர்களும் மோசமாக இருக்கின்றனர். அவர்களை கரைசேர்க்க சேரன் முயற்சி செய்துள்ளார். பூனைக்கு மணி கட்ட முயற்சித்துள்ளார் சேரன். இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார் பாக்யராஜ்

    அமீர் ஆதரவு

    அமீர் ஆதரவு

    சேரனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சொன்ன அமீர், சேரன் என்ற ஒரு மனிதன் சினிமாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை இந்த முயற்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார்.

    சினிமாவைக் காப்பாற்றும் சி2ஹெச்

    சினிமாவைக் காப்பாற்றும் சி2ஹெச்

    இது யாரையும் எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட முயற்சி இல்லை. பல திரைப்படங்கள் வெளிவர முடியாமல் இருக்கின்றன. தியேட்டர்களில் 2 நாளைக்கு ஒரு படம்தான் போட முடிகிறது. திரையரங்கு கிடைக்காத சினிமாக்களுக்குத்தான் இந்த சி2ஹெச் பலரை இது காப்பாற்றும் என்றார்.

    வெற்றி பெறுவார் சேரன்

    வெற்றி பெறுவார் சேரன்

    இது அருமையான பாதை அமைத்துக்கொடுக்கும். இது மிகப்பெரிய வெற்றியடையும். திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார் கேயார்.

    English summary
    Cheran who is one of the well known directors in Kollywood, has launched a firm yesterday. It has been named as C2H (cinema to Home). According to the statistics almost 300 films release every year in Kollywood and only 40% of the films release in Theaters. Cheran with a aim to take cinema to the homes of the viewers, has launched this company.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X