twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேரனின் சி2எச் திட்டம் தொடங்கியது... டிவிடியாக வெளியானது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை!

    By Shankar
    |

    சென்னை: இயக்குநர் சேரனின் சினிமா டு ஹோம் எனும் சி2எச் திட்டம் நேற்று பிரமாண்டமாகத் தொடங்கியது.

    திரையுலகில் தயாராகும் புதிய படத்தை ஒரே நேரத்தில் டிவிடிகள், டிடிஎச் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் வீடுகளுக்கே நேரடியாக வழங்குவதுதான் இந்தத் திட்டம்.

    அதன்படி, முதல் படமாக சேரன் இயக்கத்தில் உருவான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கைப் படத்தை நேற்று சி2எச் மூலம் வெளியிட்டனர்.

    தயாரிப்பாளர் சங்கம்

    தயாரிப்பாளர் சங்கம்

    தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவுடன் அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தின் ஆரம்ப விழாவில் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, கேஎஸ் ரவிக்குமார், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், விஜய குமார் உள்ளிட்ட பல நடிகர்களும், இயக்குனர் சங்கத் தலைவர் அமீர், கே.எஸ்.ரவிக்குமார், பாக்யராஜ், பேரரசு, சமுத்திரகனி உள்ளிட்ட பல இயக்குனர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

    ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

    ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

    இந்த விழாவில் சினிமா டூ ஹோம் திட்டத்தின் முதல் படமாக சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

    புதிய படங்கள்

    புதிய படங்கள்

    அடுத்தடுத்த வாரங்களில் மேலும் பல புதிய படங்களை நேரடியாக டிவிடியாக வெளியிடவிருக்கிறார் சேரன். இப்போதே 50 புதிய படங்கள் சேரனிடம் உள்ளன.

    மெகா நெட்வொர்க்

    மெகா நெட்வொர்க்

    இந்தத் திட்டத்தை பக்கா நெட்வொர்க்கோடு ஆரம்பித்துள்ளார் சேரன். கிட்டத்தட்ட 7000 பேர் இந்த நெட்வொர்க்கில் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு படத்தையும் நேரடியாக வீடுகளுக்கே போய் சி2எச் பணியாளர்கள் வழங்கவிருக்கின்றனர். டிவிடி விலையும் 50 ரூபாய்தான்.

    நல்ல மாற்று

    நல்ல மாற்று

    சேரனின் இந்தத் திட்டத்தை திரையுலகில் பலரும் வரவேற்றுள்ளனர். விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களின் நேர்மையற்ற வர்த்தகம், மற்றும் மக்களிடம் பணம் பிடுங்கும் அடாவடி போன்றவற்றால் வெறுத்துப் போயுள்ள பலருக்கும் இந்த சி2எச் நல்ல மாற்றாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

    English summary
    Cheran's C2H scheme was launched on Thursday at Nehru Indoor Stadium.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X