»   »  ரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்! - சேரன்

ரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்! - சேரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜியின் அரசியல் குறித்த ரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன் என்று இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியுள்ளார்.

சிவாஜி கணேசன் மணி மண்டபத் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசிய அரசியல் பேச்சு பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. கடந்த நான்கு தினங்களாக பலரும் அதுபற்றிய தங்கள் புரிதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Cheran's tweet on Rajinikanth's political speech

அந்த விழாவில் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு அரசியல்வாதியாக தோற்றுப் போனது குறித்துப் பேசிய ரஜினிகாந்த், சொந்தத் தொகுதியில் தோற்றது சிவாஜிக்கு தோல்வியல்ல, அந்த மக்களுக்குத்தான் என்று குறிப்பிட்டார்.

மேலும் அரசியலில் ஜெயிக்க புகழ், செல்வாக்கு மட்டும் போதாது, வேறொன்றும் வேண்டும். அது என்ன என்பது மக்களுக்குத்தான் தெரியும் என்றும் ரஜினி கூறினார்.

அவரது இந்த பேச்சு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சேரன், "சிவாஜி அரசியலில் வெற்றியடையாதது மக்களின் தோல்வியே தவிர சிவாஜியின் தோல்வி அல்ல' என்ற ரஜினியின் பேச்சு எவ்வளவு பெரிய உண்மை. அந்த ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன். மக்கள் ஏன் இப்படி சொன்னார் என யோசிக்கவேண்டும். அந்த ஒரு வார்த்தையின் அர்த்தம் புரிந்தால்," என்று கூறியுள்ளார்.

English summary
Director Cheran says that he has bowed to Rajinikanth's speech at Sivaji Ganesan memorial inauguration
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil