»   »  ஆடு நனையுதேன்னு.... - விஷாலை மறைமுகமாகத் தாக்கிய சேரன்!

ஆடு நனையுதேன்னு.... - விஷாலை மறைமுகமாகத் தாக்கிய சேரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என இயக்கநர் சேரன் கூறியுள்ளார்.

வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டி தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.

Cheran slams Vishal indirectly

இந்நிலையில், நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளை போல், தமிழக அரசும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

விஷாலின் இந்த கடிதத்தை இயக்குநர் சேரன் மறைமுகமாக தாக்கியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆடு நனைகிறதென ஓநாய்கள் கவலை கொள்ளும். விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கை விடுவார்கள் அவர்களை முதலில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச் சொல்லுங்க..," என்று கூறியுள்ளார்.

English summary
Director Cheran has slammed Vishal indirectly for his recent statement in support of farmers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil