»   »  "நடிகர் சங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் வேண்டாம்... தமிழ் நடிகர் சங்கம்னு பேர மாத்தணும்!"

"நடிகர் சங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் வேண்டாம்... தமிழ் நடிகர் சங்கம்னு பேர மாத்தணும்!"

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று நடிகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தின் போது தமிழ் திரைப்பட கலாச்சார பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த இயக்குநர்கள் சேரன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் ரஜினி முன் கொடுத்த ஒரு மனு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர் நடிகைகளே இங்கும் வந்து இரட்டை வேடம் போடுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பிய இயக்குநர் சேரன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரஜினிகாந்த், அஜீத் மற்றும் முன்னணி ஹீரோக்களின் முன்னிலையில் அளித்த அந்த மனுவில்,

Cheran, Suresh Kamatchi to gave a petition to Nadigar Sangam

"பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர் நடிகைகளை அந்த அமைப்பிலிருந்து வெளியேற நடிகர் சங்கம் உத்தரவிட வேண்டும்.

"அப்படி நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்காத நடிகர் நடிகைகளை உடனடியாக சங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

"வெளியேறாத நடிகர் நடிகைகளின் விபரங்கள் பிற்காலத்தில் தெரிய வந்தால், அவர்களுக்கு தொழில் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது.

"தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என்ற பெயரை 'தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்' என்று உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்," என்று நான்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Cheran, Suresh Kamatchi to gave a petition to Nadigar Sangam

இந்த மனுவைப் பார்த்த ரஜினி, 'ஏன் இன்னும் பெயர் மாற்றப்படவில்லை? அதிலென்ன பிரச்சினை?" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த விஷால், "அது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன சார்," என்றார்.

English summary
Directors Cheran and Suresh Kamatchi have gave a petition in front of Rajini and Ajith to change the name of Nadigar Sangam and to expelled PeTA members.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil