Chhello Show: ஆர்ஆர்ஆர் இல்லை.. ஆஸ்கர் 2023க்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் படம் இதுதான்!

சென்னை: அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா போட்டிக்கு இந்தியா சார்பில் போட்டியிடப் போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், குஜராத் படம் தேர்வாகி உள்ளது.

Chhello Show - The Last Film Show என்கிற படம் தான் இந்தியா சார்பாக அடுத்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

ஹாலிவுட் படங்களுக்கு கொடுக்கப்படும் ஆஸ்கர் விருது விழா உலகளவில் பிரபலம் வாய்ந்தது. உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்படும் சிறந்த அயல்நாட்டு திரைப்படத்துக்கான போட்டியில் பங்கேற்க அத்தனை நாடுகளும் சிறந்த திரைப்படங்களை ஆண்டுதோறும் அனுப்பி வருகின்றன. இந்தியாவும் தொடர்ந்து ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பிடிக்க பல படங்களை அனுப்பி வைத்து வருகிறது.

லகான்

லகான்

இயக்குநர் அசுதோஸ் கவுரிக்கர் இயக்கத்தில் அமீர்கான் நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான லகான் திரைப்படம் தான் கடைசியாக இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் வரை சென்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்தியா சார்பில் அனுப்பிய பல படங்கள் இறுதி போட்டிக்கு கூட செல்லவில்லை.

எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர்

எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர்

இந்த ஆண்டு இந்தியா சார்பில் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவின் பரிந்துரை குழு அந்த படத்தை தேர்வு செய்யவில்லை.

இரவின் நிழலும் இல்லை

இரவின் நிழலும் இல்லை

அதே போல பார்த்திபனின் உலகின் சிங்கிள் ஷாட் படம் எனக் கூறப்பட்டு வெளியான இரவின் நிழல் திரைப்படத்தையும் அந்த தேர்வுக் குழு தேர்வு செய்யவில்லை. 6 பாலிவுட் படங்கள், தமிழில் இருந்து இரவின் நிழல், தெலுங்கில் இருந்து ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட 2 படங்கள், மலையாளம், அசாம், குஜராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் இருந்து தலா ஒரு படங்கள் போட்டியிட்டன.

ஆஸ்கர் போட்டிக்கு தேர்வு

ஆஸ்கர் போட்டிக்கு தேர்வு

இந்நிலையில், குஜராத்தி படமான Chhello Show என்கிற படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. பான் நளின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஒரு சிறுவனை சுற்றியே கதை நகர்கிறது. வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தைத் தான் இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X