»   »  பிக் பாஸ் ஓவியா, ஆரவ், ஜூலி எல்லாம் பாப்பாவா இருந்தபோது எப்படி இருந்தாங்க: போட்டோக்கள் இதோ

பிக் பாஸ் ஓவியா, ஆரவ், ஜூலி எல்லாம் பாப்பாவா இருந்தபோது எப்படி இருந்தாங்க: போட்டோக்கள் இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குழந்தையாக இருந்தபோது எப்படி இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கும் வந்தது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாஸன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தற்போது பிசியாகிவிட்டனர், பிரபலமாகிவிட்டனர்.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிறு குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை உங்களுக்கு அளிக்கிறோம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப் பிரபலமானவர் ஓவியா தான். அவருக்கு தமிழகத்தில் தற்போது ரசிகர் ஆர்மியே உள்ளது.

இம்பிரஸ்

இம்பிரஸ்

நடிகை ஆர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலரின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் புற்றுநோயாளிகளுக்கு விக் செய்ய தனது தலைமுடியை தானமாக கொடுத்து நம்மை இம்பிரஸ் செய்துவிட்டார்.

வின்னர்

வின்னர்

பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் சரவணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார்.

ட்ரிக்கர்

ட்ரிக்கர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் சக்தியும் ஒருவர். ட்ரிக்கர் ஸ்டார்.

தைரியம்

தைரியம்

தைரியமான பொண்ணு என்று பெயர் எடுத்தவர் சுஜா வருணி. படங்கள் மூலம் பெரிதாக பிரபலமாகாத அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.

மச்சான்ஸ்

மச்சான்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவை பார்த்த மச்சான்ஸ் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நமீதா தான் கடுப்பில் கிளம்பிச் சென்றார். 100வது நாள் நிகழ்ச்சிக்கு கூட வரவில்லை.

போலி

போலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டவர் ஜூலி. தற்போது டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ரசிகைகள்

ரசிகைகள்

வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாணுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்துள்ளனர். புதுப்படம் ஒன்றில் ரைசாவுடன் நடிக்கிறார்.

பாவம்

பாவம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காயத்ரியின் இமேஜ் தான் பாவம் ரொம்பவே டேமேஜாகிவிட்டது. அவர் கெட்ட வார்த்தை பேசியும் கமல் கண்டிக்காதது பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைத்தது.

நல்ல பொண்ணு

நல்ல பொண்ணு

பிந்து மாதவி வந்தோமா, இருந்தோமா, சென்றோமா என்று பிக் பாஸ் வீட்டில் இருந்தார். எந்த வம்பு, தும்புக்கும் செல்லவில்லை.

எக்சிட்

எக்சிட்

நடிகை அனுயா வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். போட்டியாளர்கள் பற்றி அவர் கூறியது சரியாக இருந்ததால் அவரை ஜீனியஸ் என்றனர் பார்வையாளர்கள்.

English summary
Here is the collection of childhood pictures of Tamil Bigg Boss contestants.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil