»   »  மறுபடியும் "இம்சை"யைக் கூட்டும் ஷங்கர், வடிவேலு, சிம்பு தேவன்!

மறுபடியும் "இம்சை"யைக் கூட்டும் ஷங்கர், வடிவேலு, சிம்பு தேவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தை, லைகாவுடன் இணைந்து ஷங்கர் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006 ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி.

வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தை, இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருந்தார்.

Chimbu Devan Again Team Up with Vadivelu

இந்நிலையில் மீண்டும் வடிவேலுவை வைத்து ஒரு நகைச்சுவை படத்தை இயக்க சிம்புதேவன் முடிவு செய்திருக்கிறாராம். இப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசியின் 2 வது பாகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தை தயாரித்த ஷங்கர், லைகா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Chimbu Deven may go back to his stronghold and direct a comedy flick with versatile actor Vadivelu in the lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil