»   »  இப்பவாச்சும் தாலியை குடுத்தா கரெக்டா கட்டுவாரா பிரபு?- சில்வர் ஜூப்ளி கண்ட “சின்னத்தம்பி”!

இப்பவாச்சும் தாலியை குடுத்தா கரெக்டா கட்டுவாரா பிரபு?- சில்வர் ஜூப்ளி கண்ட “சின்னத்தம்பி”!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் தாலி என்ற ஒன்றையும், அண்ணன் பாசத்தையும் ஒரு காக்டெய்லாக கலந்து வெளியாகி தெறி வெற்றி பெற்ற "சின்னத்தம்பி" திரைப்படம் வெளியாகி 25 வருடமாகி விட்டது.

இதுகுறித்து டுவிட்டரில் அப்படத்தின் இயக்குனர் பி.வாசுவுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, 25 வருடங்களை நிறைவு செய்த "சின்னத்தம்பி" படத்தினை நினைவு கூர்கின்றோம் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி, கவுண்டமணி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி அன்றைய காலகட்டத்தில் சக்கைப்போடு போட்ட திரைப்படம் சின்னத்தம்பி.

ஓ இதுதான் தாலியா?:

ஓ இதுதான் தாலியா?:

இன்று கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு "என் தங்கம் என் உரிமை", "குறைந்த விலையில் வைரம்" என்றெல்லாம் கூவும் நடிகர் பிரபுவுக்கு இந்த படத்தில் "தாலி" என்றாலே என்னவென்று தெரியாத கேரக்டர்.

என்னா கதைடா சாமி:

என்னா கதைடா சாமி:

குஷ்புவோ காலில் தூசி கூட படாமல் பொத்திப் பொத்தி பாதுகாக்கும் அண்ணன்களின் செல்லத் தங்கை. பார்க்கவும் கொழுக், மொழுக் என்று அழகாகத்தான் இருப்பார்.

ஊரெல்லாம் மொட்டை ராஜேந்திரன்கள்

ஊரெல்லாம் மொட்டை ராஜேந்திரன்கள்

குஷ்புவை நிமிர்ந்து பார்த்தால் கூட உடனே மொட்டைதான் (ஊரெல்லாம் மொட்டை ராஜேந்திரன்கள்தான்). ஏதோ கொஞ்சம் இரக்கம் இருப்பதால் உயிரைப் பிடுங்காமல் விட்டுவிடுவார்கள் அந்த பாசக்கார அண்ணன்கள்.

அர்த்தம் தெரியாட்டியும் கட்டத் தெரியுமே:

அர்த்தம் தெரியாட்டியும் கட்டத் தெரியுமே:

அவர்கள் வீட்டில் பாட்டிற்காகவே வேலை செய்யும் பிரபுவுக்குத்தான் தாலி என்றாலே என்னவென்று தெரியாதே..... திடீரென்று ஒருநாள் அவர் கூட சேர்ந்து சுத்தும் குஷ்புவே காதலில் விழுந்து அவரை தனக்கு தாலி கட்ட வைத்துவிடுவார்.

இதுதான் டூபாக்கூர் வேலைங்கறது:

இதுதான் டூபாக்கூர் வேலைங்கறது:

அதற்கப்புறம் நடக்கும் சேசிங், பைட்டிங், கலாட்டாக்கள்தான் மீதிக்கதை. வேட்டியோடு சேர்த்து தங்களுக்கும் கஞ்சி போட்டதுபோல் சுற்றும் அண்ணன்கள், வீட்டிற்குள் கூட நகை, நட்டோடு, புல் மேக்கபோடு திரியும் ட்ரெண்டினை அன்றே அறிமுகப்படுத்திய அண்ணிகள், மகனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து தாலி என்றால் என்ன என்று (மட்டும்) சொல்லித் தராத அம்மா, கீழே கண்ணாடித் துண்டுகளைக் கொட்டி நடக்கும் காதலி என்று ஒரு டகால்டி கதையை கூட மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இயக்குனர் வாசுவையே சேரும்.

சொல்லிக் குடுத்துட்டீங்களா பாஸ்?:

எனினும், பாடல்கள் காதுகளுக்கு இனிமை சேர்த்தன. கூடவே மான்குட்டி போல் துள்ளிய குஷ்புவின் அழகிற்காகவும், பிரபுவின் கன்னக்குழி சிரிப்பிற்காகவும் மறுபடியும் பார்க்கலாம்தான்.

சின்னத்தம்பியை இப்ப ரீமேக் செய்தா கரெக்டா தாலி கட்டிருவீங்களா பிரபு சார்!

English summary
Chinnathambi film celebrates its 25 year anniversary with its gorgeous heroin kushboo and director Vasu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil