»   »  அனிருத்துடனான லீலை வீடியோ: சுசியின் ட்வீட்டுக்கு சின்மயி பொளேர் பதில்

அனிருத்துடனான லீலை வீடியோ: சுசியின் ட்வீட்டுக்கு சின்மயி பொளேர் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் மனசு சுத்தம் என்றும், தான் எதற்காகவும் பயப்பட வேண்டியது இல்லை என்றும் பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாக ட்விட்டர் மூலம் பிரபலங்களின் கசமுசாக்களை லீக் செய்து வருகிறார். இந்நிலையில் பாடகி சின்மயி-இசையமைப்பாளர் அனிருத்தின் லீலை வீடியோவை இன்று வெளிடப் போவதாக அவர் ட்வீட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சின்மயி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

கார்த்திக்

இந்த பிரச்சனை துவங்கியதுமே நானும், ராகுலும் கார்த்திக் குமாரிடம் பேசினோம். அவருக்கு(சுசிக்கு) மனநலம் சரியில்லை என்று அவர் கூறியதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

மன அழுத்தம்

நம்மில் பலருக்கு அல்லது நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. நாம் அது பற்றி பேசுவது இல்லை. அவ்வளவு தான்.

ட்விட்டர்

அவரின்(சுசித்ரா) ட்விட்டர் கணக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது சரியல்ல.(அவர் என்னை பல காலத்திற்கு முன்பே பிளாக்(block) செய்துவிட்டார். காரணம் அவருக்கு மட்டும் தான் தெரியும்)

மனசு

என் மனசு சுத்தமாக உள்ளது. நான் எதற்காகவும் பயப்பட வேண்டியது இல்லை. நான் நல்லவளாக இருக்கவே முடிவு செய்துள்ளேன். கர்மா என சின்மயி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Singer Chinmayi has clarified about Suchitra's controversial tweet saying that she has nothing to afraid of.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil