»   »  என்னை கற்பழிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.. ட்விட்டர் கணக்குகளை முடக்குங்க! - சின்மயி

என்னை கற்பழிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.. ட்விட்டர் கணக்குகளை முடக்குங்க! - சின்மயி

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னை கற்பழிக்கப் போவதாக ட்விட்டரில் பலரும் மிரட்டுகிறார்கள். எனவே அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

இது தொடர்பாக, மாற்றம் கோரும் இணையதளமான change.com-ல் ஒரு வேண்டுகோளை வைத்து, மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.

Chinmayi files online petition to save from Rape threats

சமூக வலைத் தளமான ட்விட்டரில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடிகர் நடிகைகளின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் வலம் வருகின்றன. ஆரம்பத்தில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இவை வெளியாகின. பின்னர் அந்தக் கணக்கு முடக்கப்பட்டதும், சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேகுடன் வெவ்வேறு பக்கங்களில் வெளியாகி வருகின்றன.

சின்மயி - அனிருத் படங்கள், வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் ஒரு சுசித்ரா பக்கத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும் சின்மயி பற்றிய மேலும் சில அந்தரங்க தகவல்களும் அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் தன்னை கற்பழிக்கப் போவதாகவும், முகத்தில் ஆசிட் அடிக்கப் போவதாகவும் மிரட்டல் வருவதாக புகார் கூறியுள்ளார் சின்மயி.

இந்த மாதிரி மிரட்டல் விடும் நபர்களின் கணக்குகள் அனைத்தையும் ட்விட்டர் முடக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து, ஒரு ஆன்லைன் பெட்டிஷனை இணைய வாசிகளிடம் வைத்துள்ளார் சின்மயி.

English summary
Singer Chinmayi has filed an online petition to clean up filthy accounts in Twitter and save her from Rape threats.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil