Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நயன்தாரா பற்றி ஆபாச ட்ரோல்... வீட்லயும் அப்படி தானா...?: நெட்டிசன்களிடம் பொங்கிய சின்மயி
சென்னை: நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாக கலந்துகொணடனர்.
அப்போது நயன்தாரா அணிந்திருந்த ஆடை குறித்தும் அவரது மார்பகங்கள் பற்றியும் இணையத்தில் ஆபாசமான கமெண்ட்ஸ்கள் வைரலாகின.
இதனையடுத்து நயன்தாராவுக்கு ஆதரவாக பாடகி சின்மயி களமிறங்கி பதிலடி கொடுத்துள்ளார்.
நயன்தாரா கூட படம் பார்க்கலாம்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திட்டாங்க.. வருத்தப்பட்ட ஜிபி முத்து!

கனெக்ட் ஆனதா கனெக்ட் மூவி
நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படம், ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் நடித்திருந்த கனெக்ட் படத்தின் பிரிமீயர் ஷோ மூன்று தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஜோடியாக கலந்துகொண்டனர்.

ஆடை, மார்பகங்கள் சர்ச்சை
இந்நிலையில், கனெக்ட் பிரிமீயர் ஷோவில் கலந்துகொண்ட நயனின் வீடியோ இணையத்தில் வெளியானது. அதில் நயனின் ஆடை பற்றியும், அவரது மார்பகங்கள் குறித்தும் நெட்டிசன்கள் ஆபாசமாக கமெண்ட்ஸ்கள் பதிவு செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நயன் மீது சமூக வலைதளங்களில் அரங்கேறும் ஆபாச வன்முறை குறித்து பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் தனது கமெண்டை தடை செய்த தனியார் ஊடகத்தை கண்டித்தும் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கருத்து பகிர்ந்திருந்தார் சின்மயி.

நெட்டிசன்களுக்கு சரமாரி கேள்வி
அதுமட்டும் இல்லாமல் நயன் பற்றிய ஆபாச கமெண்ட்ஸ்களுக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள சின்மயி, சில ஸ்கிரீன் ஷாட்களையும் ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு பெண் அவரது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதனை குறிப்பிட்டுள்ள சின்மயி, "இந்த ஆண்கள் எல்லாம் தாய்ப்பால் குடித்து வளர்ந்திருப்பார்களா என நான் வியக்கிறேன். தங்கள் மகன்கள் கணவன்மார்கள் முன்பும் கூட மகள்களை சில பெண்கள் துப்பட்டா அணியச் சொல்வதில் ஆச்சர்யமில்லை" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், தங்கள் மகள் சகோதரிகளிடம் கூட ஆண்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதா?" எனவும் கடுமையாகச் சாடியுள்ளார் சின்மயி. அவரின் இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயனுக்கு பெருகும் ஆதரவு
நயன் ஆடை சர்ச்சைக்கு சின்மயி குரல் கொடுத்ததில் இருந்து, ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆடை, மார்பகங்கள் என இதுபோன்ற அநாகரிமான கமெண்ட்ஸ்களுக்கு யாரும் ஆதரவு தரக் கூடாது என கூறி வருகின்றனர். மேலும், சின்மயியின் பதிவுக்கு கீழேயும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் முதல் இரண்டு நாட்கள் போதிய ஓப்பனிங் இல்லாத கனெக்ட், தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பாக்ஸ் ஆபிஸில் 5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சின்மயியின் பதிலடியும் கனெக்ட் படத்திற்கு சரியான ப்ரோமோஷனாக அமைந்துள்ளது. இதனால் வரும் வாரத்திலும் கனெக்ட் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.