கடவுளே காப்பாத்து...ஷாருக்கான் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யும் சின்மயி
சென்னை : தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடி பிரபலமானவர் பாடகி சின்மயி. பல இசை ஜாம்பவன்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள். தனது இனிய குரலாலும், சோஷியல் மீடியாவில் துணிச்சலான செயல்பாடுகளால் அனைவரையும் ஈர்த்தவர் சின்மயி.
Me too விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை கிளப்பினார் சின்மயி. இதையடுத்து நடிகர் ராதாரவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி பல விவகாரங்களில் சிக்கி உள்ள சின்மயி, தற்போது ஷாருக்கான் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

ஷாருக்கானுக்காக பிரார்த்தனை
இவர் பாலிவுட் டாப் ஹீரோ ஷாருக்கானுடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ஷாருக்கானும், அவரது குடும்பத்தினர்களும் தற்போது சில மோசமான நாட்களை சந்தித்து வருகின்றன. அவர்கள் அதிலிருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யான் கான் கைது
ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் அக்டோபர் 2 ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 3 ம் தேதி முதல் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யானின் ஜாமின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

ஷாருக்கான் வீட்டில் ரெய்டு
ஆர்யானுக்கு ஜாமின் வழங்க என்சிபி அதிகாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆர்யானின் வாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே மற்றும் ஷாருக்கானின் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன் என்சிபி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அனன்யா பாண்டேவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மகனை பார்த்த ஷாருக்கான்
இதற்கிடையில் மகனுக்கு தொடர்ந்து ஜாமின் கிடைக்காமல், அவர் சிறையில் இருந்து வருவதால், மும்பை சிறைக்கே இதுவரை இரண்டு முறை நேரில் சென்று மகனை பார்த்துள்ளார் ஷாருக்கான். ஏற்கனவே பலர் ஷாருக்கானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன், போனில் அழைத்து அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

பிரார்த்தனை செய்யும் சின்மயி
இந்நிலையில் சின்மயி, ஷாருக்கானுக்காக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளதால் பல திரை பிரபலங்களும் அவரது கருத்தை வரவேற்று, ஆதரித்துள்ளனர். அதோடு தொடர்ந்து ஷாருக்கானுடன் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களையும் சின்மயி ட்விட்டரில் விரிவாக எழுதி உள்ளார்.

ஷாருக்கான் எனக்கு ஸ்பெஷல்
ஷாருக்கான் தனது அம்மா பத்மஹாசினியின் கடிதத்தையும், பலர் கூடி இருந்த அறையில் அவரிடம் ஆர்வாதம் வாங்கியதையும் ஷாருக்கான் எவ்வாறு நினைவில் வைத்துள்ளார் என்பதையும் சின்மயி குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கான் தன்னையும், தன் அம்மாவையும் ஸ்பெஷலாக உணர வைத்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











