»   »  ஆத்தாடி, காலைக் கொண்டு போய் எங்க வச்சிருக்கு பாருங்க இந்த சின்மயி!

ஆத்தாடி, காலைக் கொண்டு போய் எங்க வச்சிருக்கு பாருங்க இந்த சின்மயி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரபல பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படம் ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது.

பாடகி சின்மயி ட்விட்டரில் பயங்கரமான பிரபலம். அவ்வப்போது அவரது ட்வீட்டுகள் வைரல் ஆவதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தொடர்பான ட்விட்டர் விவகாரம் பூதாகரமாகி சிலரின் கைது வரை சென்றது பலரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஒரு திரில்லான, திகிலான படத்தைப் போட்டு தெறிக்க விட்டுள்ளார் சின்மயி.

லேட்டஸ்ட் புகைப்படம் :

அவர் அமெரிக்காவின் குதிரைக் குளம்பு வளைவு (Horse shoe bend) எனும் அபாயகரமான இடத்தில் இருந்து கால்களைப் பள்ளத்தாக்கில் தொங்கவிட்டபடி எடுத்த புகைப்படத்தைப் பதிவேற்றி, இன்றைய சூரிய கிரகணம் அமெரிக்காவில் என கேப்ஷன் போட்டிருந்தார்.

நம் ஆட்கள் சும்மா இருப்பார்களா

அதற்கு நம் ட்விட்டர் ஆட்கள் சும்மா இல்லாமல், ரிப்ளையில் கலாய்த்துத் தள்ளித் திணறடித்தனர். அவரும் சளைக்காமல் ரிப்ளையில் கவுன்ட்டர் கொடுத்தார்.

இது செம்பரம்பாக்கம் ஏரியாச்சே :

இயக்குநர் சி.எஸ்.அமுதன், 'இது ஶ்ரீபெரும்புதூர் போற வழியில இருக்குற செம்பரம்பாக்கம் ஏரிதானே..?' என நக்கலாக கமென்ட் செய்திருந்தார். அதற்கு பதில் கொடுத்த சின்மயி, 'இல்ல இது விவேகானந்தர் மலை... துபாய் மெயின்ரோட்ல இருந்து லெஃப்ட் எடுத்தா வரும்' என கவுன்ட்டர் கொடுத்தார்.

இந்தப் பணக்காரங்களே இப்படித்தான் :

அதற்கு சி.எஸ்.அமுதன் மீண்டும், 'இந்தப் பணக்காரங்களே இப்படித்தான்... தெரியாம கேக்குறவங்கள இப்படித்தான் கிண்டல் பண்றதா? எனக் குறும்பகாகக் கேட்டார்.

'நீங்க சொன்ன நேரம் நல்லாயிருந்து, மாட மாளிகை கூட கோபுரம்னு பணக்காரி ஆகணும்... எத்தன நாள்தான் வாடகை வீட்டுலயே இருக்குறது..?' என சின்மயி சமாளித்தார்.

பாவம்யா அவங்க :

மேலும் பலரும் செமையாகக் கலாய்த்தனர். அதில் ஒருவர், 'ஆத்தீ, ப்ளூ வேல் சேலஞ்சோனு நினைச்சு பயந்துட்டேன்' என்றார். மேலும் சிலர், 'ரிஸ்க் எடுக்காதீங்க... ' என அட்வைஸ் செய்தனர்.

English summary
Singer Chinmayi's photo got viral in twitter. That photo was taken from horse shoe bend, America.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil