twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    33 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விதைகளின் நாயகன்... சின்ன கலைவாணரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்!

    |

    சென்னை : சின்னக் கலைவாணர் என்று அனைவராலும் பாராட்டிற்குட்பட்ட நடிகர் விவேக் கடந்த ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். அவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பை மற்றொரு வகையில் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆசையை மரங்களை நட்டு பூர்த்தி செய்து வந்தார் விவேக்.

    Recommended Video

    விதைகளின் நாயகன் Vivek | முதல் ஆண்டு நினைவு தினம் | Filmibeat Tamil

    எஸ்கே 20 படத்திற்கு இப்படி ஒரு அப்டேட்டா... செம த்ரில்லிங்கா இருக்கே எஸ்கே 20 படத்திற்கு இப்படி ஒரு அப்டேட்டா... செம த்ரில்லிங்கா இருக்கே

    சின்னக் கலைவாணர் விவேக்

    சின்னக் கலைவாணர் விவேக்

    நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டவர். காமெடி தளத்திலேயே போகிற போக்கில் சமுதாயத்திற்கு தேவையான பல கருத்துக்களை சொல்லியவர் அவர். அவரது நடிப்பில் காமெடி மட்டுமில்லாமல் பல சீர்திருத்தக் கருத்துக்களும் காணப்பட்டன.

    காமெடி கலாட்டாக்கள்

    காமெடி கலாட்டாக்கள்

    இவரது காமெடியும் வைகைப்புயல் வடிவேலு காமெடியும்தான் தொலைக்காட்சி சேனல்களில் அதிகமாக ரசிகர்களை தற்போதுவரை மகிழ்வித்து வருகின்றன. இவர் ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இணைந்து செய்துள்ள பல காமெடி கலாட்டாக்கள் இப்போதுவரை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக உள்ளன.

    சமுதாயக் கருத்துக்கள்

    சமுதாயக் கருத்துக்கள்

    தொடர்ந்து தன்னுடைய காமெடிகளில் பழைய படங்களை எடுத்துக் கொண்டு அதையொட்டி சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை காமெடியுடன் புகுத்தினார் விவேக். ஹீரோக்களுக்கு இணையான காமெடி கேரக்டர்களை செய்த இவர், தனி ட்ராக்குகளையும் தன்னுடைய படங்களில் கொண்டு வந்தார்.

    உலகநாயகனுடன் நடிக்காத விவேக்

    உலகநாயகனுடன் நடிக்காத விவேக்

    ரஜினி முதல் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர் உலகநாயகன் கமலுடன் மட்டும் கடைசி வரை இணைந்து நடிக்கவேயில்லை. சினிமாவில் தொடர்ந்து சிறப்பாக நடித்துவந்த விவேக்கிற்கு தன்னுடைய மகன் பிரசன்னாவின் இழப்பு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இதையொட்டி புத்திர சோகம் குறித்து இவர் கடிதமும் எழுதியுள்ளார்.

    33 லட்சம் மரக்கன்றுகள்

    33 லட்சம் மரக்கன்றுகள்

    இந்த சோகத்தை எதிர்கொள்ள அப்துல்கலாமின் கனவான ஒருகோடி மரங்களை நடுவதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால் அவர் இருந்தவரை 33 லட்சம் மரங்களையே தமிழகத்தில் நட முடிந்தது. அவரது பணியை பல்வேறு இயக்கங்கள் தற்போது தொடர்ந்து வருகின்றன.

    விதைகளின் நாயகன்

    விதைகளின் நாயகன்

    மரங்கள் குறித்த பல்வேறு விஷயங்களை அவர் அறிந்திருந்தார். அதை தொடர்ந்து பலருக்கு அறிவுறுத்தியும் வந்தார். மரம் நடுவதில் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்தார். இதன்மூலம் விதைகளின் நாயகன் என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது.

    பன்முகத் திறமை

    காமெடியனாக மட்டுமின்றி, மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இசையமைப்பாளராகவும் பன்முகத் திறமையை தன்னுள் வைத்திருந்தார் விவேக். தன்னுடைய மகனை மிகச்சிறந்த இசையமைப்பாளராக உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் கனவாகவே இருந்தது.

    English summary
    Vithaigalin Naayagan Vivek's first year death anniversary today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X