இனி நான் காணாமல் போகவே மாட்டேன்...கதறி அழும் சின்ன பொண்ணு

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில், தற்போது முதல் எவிக்ஷன் நடைபெற உள்ளது. முதலில் யார் வெளியேற போகிறார்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

வாரத்தின் பாதி வரை அபிஷேக் அல்லது சின்ன பொண்ணு இருவரில் யாராவது ஒருவர் தான் முதல் ஆளாக வெளியே போகிறார்கள் என கூறப்பட்டது. தற்போது நாடியா சாங் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இதுவரை ஜொலித்தவர்கள் யார், காணாமல் போனவர்கள் யார் என்பதை தேர்வு செய்து சொல்ல குழு அமைக்கப்பட்டது. இதில் அபிஷேக், பாவனி மற்றும் அக்ஷரா ஆகியோர் உள்ளனர். இவர்கள் யாருக்கும் தெரியாமல் ஆலோசனை செய்து வந்தனர்.

10 பேர் சேவ்

10 பேர் சேவ்

டென்ஷனாக எவிக்ஷன் அறிவிப்பு வர உள்ள நிலையில், நாமினேட் செய்யப்பட்ட 15 பேரில் 10 பேர் சேவ் செய்யப்பட்டதாக நேற்று கமல் கூறினார். தொடர்ந்து ஐந்து பேரில் ஒருவர் வெளியேற உள்ளதாக கூறினார். இந்நிலையில் எவிக்ஷன் பற்றிய முதல் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது.

வெளியேற போவது யார்

வெளியேற போவது யார்

இதில் கையில் எளிமினேட் ஆக போகிறவரின் பெயர் அடங்கிய அட்டையுடன் வரும் கமல், எனக்கும் திக் திக் என்று தான் உள்ளது. அதனால் தான் நெஞ்சோடு அணைத்து கொண்டு வந்துள்ளேன் என கூறி, வெளியேற போகிறவர் யார் என்பதை சொல்லட்டுமா உங்கள் அனுமதியுடன் என்கிறார்.

காணாமல் போன 2 பேர்

காணாமல் போன 2 பேர்

இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசும் கமல், ஒளிந்தவர் யார், மிளிந்தவர் யார், காணமல் போனவர் யார் என்பதை வகைப்படுத்த சொல்லி இருந்தார்கள் என்கிறார். அப்போது அபிஷேக், ஜொலித்தவர் இமான் அண்ணாச்சி. காணாமல் போனவர்கள் சின்ன பொண்ணு மற்றும் நாடியா சாங் என்கிறார். இதைக் கேட்டு டென்ஷனாகும் நாடியா, நான் மட்டும் தான் காணாமல் போயிருக்கேனா. இவர்கள் என்னை கவனித்ததால் தான் நான் காணாமல் போனதாக தெரிந்துள்ளது என்கிறார்.

கதறி அழும் சின்ன பொண்ணு

கதறி அழும் சின்ன பொண்ணு

அடுத்த கட்டில் கதறி அழும் சின்ன பொண்ணுவை, கட்டிப்பிடித்து தேற்றுகிறார் அக்ஷரா. அப்போது சின்னபொண்ணு கமலிடம், சத்தியமா இனி நிச்சயம் காணாமல் போக மாட்டேன் சார். இந்த வீட்டிலையும், மக்களிடமும் என்கிறார் நம்பிக்கையுடன். இந்த ப்ரோமோவால் சின்னபொண்ணுவை வெளியேற போவதில்லை, தொடர்ந்து போட்டியில் நீடிக்க போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. சேவ் என சொல்லியதற்கு தான் அவர் இப்படி அழுகிறார் போல.

ஓவர் ஆக்டிங் பண்ணாரு

ஓவர் ஆக்டிங் பண்ணாரு

இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு பலர், சின்ன பொண்ணு ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணுறார். பாவம் நாடியா சாங் தான் வெளியேற போகிறார் என கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர், பிரியங்கா, நிரூப், ராஜு, அண்ணாச்சி இல்லைன்னா இந்த சீசன் ரொம்ப கேவலமா போயிருக்கும். நல்ல வேளை அவங்க காப்பாத்திட்டாங்க என கூறி உள்ளனர்.

ராஜுவை ஓரங்கட்டும் அபிஷேக்

ராஜுவை ஓரங்கட்டும் அபிஷேக்

அபிஷேக் ராஜுவை இரிடேட் பண்ணுறார். ராஜு பெஸ்டாக வர கூடாதென இமான் அண்ணாச்சி பெயரை சொல்லிட்டார். அபிஷேக் ஏதோ தப்பு பண்ணுறாருன்னு தோணுது. நாடியா இங்க மட்டும் நல்லா பேசுறாங்க. மற்ற நேரங்களில் சும்மாவே உட்கார்ந்திருக்காங்க. எதுலையும் இன்வால்வ் ஆகல என பலர் பல விதங்களில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X