God Father Box Office: சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா நடித்த காட்ஃபாதர் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஹைதராபாத்: இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா நடித்த காட்ஃபாதர் திரைப்படம் விஜயதசமியை முன்னிட்டு நேற்று வெளியானது.

சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் ஆச்சார்யா படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், மலையாளத்தில் மோகன்லால் நடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லூசிஃபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்துள்ளார் சிரஞ்சீவி.

ரீமேக் படங்களுக்கு முக்கியத்துவம்

ரீமேக் படங்களுக்கு முக்கியத்துவம்

நாடு முழுவதும் ஒரு மொழியில் ஹிட் அடிக்கும் படத்தை விட இன்னொரு பெரிய படத்தை எடுத்து ஹிட் அடிக்க வேண்டும் என்கிற நிலை மாறி, வெற்றி பெறும் குதிரை மீது சவாரி செய்ய ஆரம்பித்துள்ளனர். பாலிவுட்டில் ஏகப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் ரீமேக் ஆகி வர காரணமும் அதுதான். சினிமா மிகப்பெரிய பிசினஸ் என்பதால், முன்னணி நடிகர்களும் வெற்றி படங்களை ரீமேக் செய்து நடித்து வருகின்றனர்.

மோகன்லால் படம்

மோகன்லால் படம்

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்டோருடன் இயக்குநர் பிருத்விராஜும் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தைத் தான் தற்போது காட்ஃபாதர் எனும் டைட்டிலில் இயக்குநர் மோகன் ராஜா இயக்க சிரஞ்சீவி நடித்துள்ளார்.

சல்மான்கான்

சல்மான்கான்

தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ள லூசிஃபர் படத்தில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானின் ஆக்‌ஷன் அதிரடியில் நேற்று வெளியான காட்ஃபாதர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

தொடர்ந்து சிரஞ்சீவியின் படங்கள் சொதப்பி வந்த நிலையில், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படம் வெற்றிப்படமாக மாறி உள்ளது. முதல் நாளிலேயே 38 கோடி ரூபாய் வசூலை உலகளவில் காட்ஃபாதர் திரைப்படம் குவித்துள்ளதாக கோனிடேலா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியில் அமோகம்

இந்தியில் அமோகம்

ஆந்திரா, தெலங்கானாவை தொடர்ந்து வட இந்தியாவிலும் காட்ஃபாதர் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் எக்ஸ்டண்ட் கேமியோவாக சல்மான் கான் நடித்தது தான் அதற்கு காரணம் என்கின்றனர். மேலும், தியேட்டருக்கு வருவதற்கு முன்பாகவே சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் என இந்த படம் லாபகரமான படமாகவே மாறியது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா மிரட்டல்

நயன்தாரா மிரட்டல்

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நயன்தாரா நடித்துள்ளார். சைரா நரசிம்மா ரெட்டி படத்துக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவி உடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா தோளுக்கு வளர்ந்த மகளுக்கு அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி உள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X