வெளியானது சிரஞ்சீவியின் காட்ஃபாதர்’ ட்ரெய்லர்: ஆக்சனில் அதிரடி காட்டும் சல்மான் கான்

ஐதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மோகன்ராஜா இயக்கியுள்ள இந்தப் படம் மலையாளத்தில் வெற்றிப் பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

இந்நிலையில், சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா நடித்துள்ள 'காட்ஃபாதர்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

லுசிபருக்கு டஃப் கொடுக்குமா காட்ஃபாதர்

லுசிபருக்கு டஃப் கொடுக்குமா காட்ஃபாதர்

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் கடைசியாக 'ஆச்சார்யா' திரைப்படம் வெளியானது. சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், அவர் தற்போது 'காட்ஃபாதர்' படத்தில் நடித்துள்ளார். மோகன் ராஜா இயக்கியுள்ள இத்திரைப்படம், மலையாளத்தில் வெற்றிப் பெற்ற 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது. மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

வெளியானது காட்ஃபாதர் ரெய்லர்

வெளியானது காட்ஃபாதர் ரெய்லர்

பிருத்விராஜ் இயக்கிய முதல் படமான லூசிபரில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொலிட்டிக்கர் திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தில், மோகன்லால் கேங்ஸ்டராகவும் அரசியல்வாதியாகவும் மாஸ் காட்டியிருப்பார். 'லூசிபர்' மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூல் செய்தது. இந்நிலையில், லூசிபருக்கு சவால் விடும் வகையில் காட்ஃபாதர் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தற்போது செம்ம மாஸ்ஸான ட்ரெய்லர் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது.

சிரஞ்சீவியுடன் சல்மான் கான்

சிரஞ்சீவியுடன் சல்மான் கான்

மலையாளத்தை போலவே தெலுங்கிலும் அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள காட்ஃபாதர் ட்ரெய்லர், சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. மலையாளத்தில் மோகன்லால் கேரக்டரில், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், லூசிபர் படத்தில் பிருத்விராஜ் கேரக்டரில் நடித்துள்ளார். நயன்தாராவும் இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். சல்மான் கான் முதன்முறையாக தென்னிந்திய மொழித் திரைப்படத்தில் நடிப்பது, டோலிவுட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் வெளியாகிறது

அடுத்த மாதம் வெளியாகிறது

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ், பல வருடங்களுக்குப் பிறகு 'காட்ஃபாதர்' படத்தை இணைந்து தயாரித்துள்ளது. சிரஞ்சீவியின் இந்தப் படம் அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காட்ஃபாதர் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் 200 கோடிக்கும் மேல் வசூலித்த லூசிபருக்கு, தெலுங்கு காட்ஃபாதர் டஃப் கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X