»   »  சிரஞ்சீவி மகளுக்கு நாளை 2 வது திருமணம்.. என்ஆர்ஐ தொழிலதிபரை மணக்கிறார்

சிரஞ்சீவி மகளுக்கு நாளை 2 வது திருமணம்.. என்ஆர்ஐ தொழிலதிபரை மணக்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் மகளும், ராம் சரணின் சகோதரியுமான ஸ்ரீஜாவுக்கு நாளை பெங்களூரில் 2 வது திருமணம் நடைபெறுகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கடந்த 2007 ம் ஆண்டு வீட்டை விட்டு சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தனது தந்தை மற்றும் உறவினர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கணவர் கொடுமை

கணவர் கொடுமை

திருமணமாகி சில மாதங்கள் கழித்து தன்னுடைய குடும்பத்தாருடன் ஸ்ரீஜா மீண்டும் உறவு கொள்ள ஆரம்பித்தார். இந்நிலையில் அவரது கணவர் அவரைக் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் கொடுத்தார்.

விவாகரத்து

விவாகரத்து

தொடர்ந்து கணவருடன் வாழ முடியாது என்று பெற்றோர் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார். 2 மாதங்களுக்கு முன் ஸ்ரீஜாவுக்கு 2 வது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, மாப்பிள்ளை தேடி வந்தனர்.

தொழிலதிபர்

தொழிலதிபர்

சிரஞ்சீவியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபரின் மகனான கல்யாண் என்பவரை மணமகனாக தேர்வு செய்துள்ளனர். ஸ்ரீஜா-கல்யாண் திருமணம் நாளை பெங்களூரில் உள்ள சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் நடைபெறுகிறது.

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

நாளை நடைபெறும் திருமணத்திற்கு மிகவும் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருக்கின்றனர். ஸ்ரீஜாவின் திருமண வரவேற்பு வருகின்ற 30 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹையாத் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த வரவேற்புக்கு நடிக, நடிகையர் மற்றும் அரசியல்வாதிகளை அழைக்க சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

English summary
Chiranjeevi's Daughter Srija Second Marriage Held Tomorrow at Bangalore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil