»   »  2 வது திருமணத்திற்குத் தயாரான சிரஞ்சீவி மகள்..வெளிநாடு வாழ் இந்தியரை மணக்கிறார்

2 வது திருமணத்திற்குத் தயாரான சிரஞ்சீவி மகள்..வெளிநாடு வாழ் இந்தியரை மணக்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவுக்கு விரைவில் 2 வது திருமணம் நடைபெறவிருக்கிறது.

ஸ்ரீஜா கடந்த 2007 ம் ஆண்டு உடன் படித்த ஸ்ரீரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து மணந்து கொண்டார். வீட்டை விட்டு ஓடிப்போய் ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டது சிரஞ்சீவியின் குடும்பத்துக்கு ஒரு தீராத வருத்தத்தை ஏற்படுத்தியது.

Chiranjeevi Daughter Set for Second Marriage

எனினும் இந்த காதல் திருமணத்தை தான் ஏற்றுக் கொள்வதாக சிரஞ்சீவி அறிக்கை விட்டார்.காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், 2011 ம் ஆண்டு வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக ஸ்ரீஜா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறை ஸ்ரீரிஷ் அவரின் அம்மா சூர்யமங்களா மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஸ்ரீஜா மற்றும் ஸ்ரீரிஷ் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சிரஞ்சீவியின் மகளும், ராம் சரணின் சகோதரியுமான ஸ்ரீஜாவுக்கு 2 வது திருமணம் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் ஸ்ரீஜாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருடன் ரகசியமான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது.

தனது மகளின் 2 வது திருமணம் குறித்து சிரஞ்சீவி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Close Sources Said Mega Star Chiranjeevi's Daughter Srija will wed an NRI from Chittoor in March.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil