»   »  அரசியல் பிரவசேம் ரசிகர்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்

அரசியல் பிரவசேம் ரசிகர்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Chiranjeevi

ஹைதராபாத்: அரசியல் பிரவேசம் குறித்து வெளியாகும் செய்திகள் குறித்து ரசிகர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும், நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நானே அறிவிப்பு எதையும் விடுக்கும் வரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

சிரஞ்சீவி விரைவில் அரசியலில் குதிக்கப் போகிறார், புதிய கட்சியைத் தொடங்கப் போகிறார் என்று ஆந்திரா முழுவதும் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் சிரஞ்சீவி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த விவகாரம் குறித்து நான் அறிவிப்பு எதையும் வெளியிடும் வரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும், அமைதி காக்க வேண்டும். என் சார்பாக எதையும் அறிவிக்கும் உரிமையை நான் யாருக்கும் தரவில்லை.

எனவே நானாக எந்த அறிவிப்பும் வெளியிட்டால் மட்டுமே அதை நீங்கள் நம்ப வேண்டும். வேறு எதையும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.

இதற்கிடையே சிரஞ்சீவியை தங்கள் பக்கம் இழுக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக முயற்சிப்பதாக ெதரிகிறது. எனவே கம்யூனிஸ்ட்டுகள் பக்கம் சிரஞ்சீவி சாய்வாரா அல்லது தனிக் கட்சி தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே தல்லி தெலுங்கானா என்ற கட்சியை ஆரம்பித்து லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி சிரஞ்சீவிக்கு சீனியராக அரசியலில் கலக்கிக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சிரஞ்சீவியும் அரசியலுக்கு வந்தால், அது என்ன மாதிரியான பாதிப்பை தங்களுக்கு ஏற்படுத்தும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டுள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil