»   »  காதல் காட்சியில் நடிக்க தயங்கிய சீனியர் ஹீரோ: தைரியம் கொடுத்த காஜல்

காதல் காட்சியில் நடிக்க தயங்கிய சீனியர் ஹீரோ: தைரியம் கொடுத்த காஜல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவி காஜல் அகர்வாலுடனான காதல் காட்சிகளில் நடிக்க தயங்கியுள்ளார்.

அரசியல் பக்கம் சென்ற பிறகு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

அவர் விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்.

கைதி எண் 150

கைதி எண் 150

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி எண் 150 கடந்த 11ம் தேதி வெளியானது. தெலுங்கு ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாட தமிழ் ரசிகர்களோ மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஜல்

காஜல்

படப்பிடிப்பின் முதல் நாள் அன்று ஒரு காட்சியில் சிரஞ்சீவி காஜல் அகர்வாலின் தோளில் கையை போட வேண்டும். சிரஞ்சீவியோ காஜலை தொட வெட்கப்பட்டு டென்ஷனாகியுள்ளார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

தனது மகன் ராம் சரண் தேஜாவுடன் ஜோடியாக நடித்த சின்ன பொண்ணை எப்படி காதலிப்பது போன்று நடிப்பது என்று சிரஞ்சீவி ரொம்பவே தயங்கி நின்றுள்ளார்.

தைரியம்

தைரியம்

தன்னை தொட்டு நடிக்க சிரஞ்சீவி சங்கடப்படுவதை பார்த்த காஜல் சும்மா தொடுங்க சிருகாரு இதெல்லாம் வெறும் நடிப்பு தான். டென்ஷன் ஆகாதீர்கள் என்று தைரியம் சொல்லி நடிக்க வைத்துள்ளார்.

English summary
Mega star Chiranjeevi felt uncomfortable romancing Kajal Agarwal for his comeback movie Khaidi No 150.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil